Kangana On Gehraiyaan | "தோலை காட்டினாலும், பார்ன் படம் காட்டினாலும்..” : தீபிகா படம் குறித்து கங்கனாவின் இன்றைய ஊர்வம்பு..!
தீபிகா படுகோனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் Gehraiyaan திரைப்படம் ஒரு மோசமான திரைப்படம் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
![Kangana On Gehraiyaan | bollywood actress kangana ranaut take dig at Deepika Padukone Gehraiyaan movie No amount of skin show can save it Kangana On Gehraiyaan |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/756b85d65deded3530bab3607b92dc24_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீபிகா படுகோனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் Gehraiyaan திரைப்படம் ஒரு மோசமான திரைப்படம் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மோசமான படம் மோசமான படம்தான்
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ நானும் இந்த நூற்றாண்டை சேர்ந்தவள்தான். என்னால் இந்த வகையான காதலை அறியவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த படம், புதிய வகையான படம் என்று கூறி குப்பைகளை விற்காதீர்கள்.
மோசமான படம் மோசமான படம்தான். அதிகபடியாக தோலை காட்டுவதாலோ அல்லது ஆபாசத்தை காட்டுவதாலோ படத்தை காப்பாற்றமுடியாது” என்று பதிவிட்டதோடு 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய பாடலையும் அதில் இணைத்திருக்கிறார். இன்றைய ஊர்வம்பு இது என்று கூறுமளவுக்கு தினமும் ஒருவரைப்பற்றி விமர்சித்து கருத்திட்டு வருகிறார் கங்கனா.
பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை தீபிகா படுகோன், நடிகர் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கெஹ்ரையான். பிப்ரவரி 11 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் முன்பே வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. காரணம், தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி இருவரும் நெருக்கத்தின் உச்சத்தில் இருந்தனர்.
நெருக்கம் பற்றி கணவர் சொன்னது என்ன?
இது குறித்து தீபிகா படுகோனிடம் உங்கள் கணவர் இது குறித்து சொன்னது என்ன என்று கேட்ட போது, “ மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீரின் மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைக்கிறேன். எனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார்” என்று கூறினார்.
கெஹ்ரையானைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருந்த தீபிகா, “இதில் நடமாடும் கதாபாத்திரங்களில் நிறைய உண்மைத்தன்மை இருக்கும். இந்த ரோல் என் மனதுக்கு நெருக்கமானது. சவாலானதும்கூட” எனச் சொல்லியிருந்தார்.
View this post on Instagram
கெஹ்ரையான் உறவுச்சிக்கலை விளக்கும் படம். தீபிகாவின் நடிப்பு இதில் பெருமளவு பாராட்டப்பட்டு வருகிறது. தீபிகா ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளர். கரன் தீபிகாவின் கணவர். தீபிகாவின் தங்கை டியாவுக்கு நிச்சயமான ஜெயினுடன் தீபிகாவுக்கு காதல் மலர்வதும், உறவுச்சிக்கலும்தான் கெஹ்ரையான் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | IPL 2022 Auction CSK: நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)