மேலும் அறிய

ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் விஜய் படத்தின் வில்லன் நடிகர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் பிரபல இந்தி நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடைசியாக தர்பார் நடித்திருந்தார். இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பெரும்பாலான படப்பிடிகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்திற்கும் ரஜினிகாந்தும் டப்பிங் பேசிவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாத்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலாயுதம் படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். நடிகர் விஜய் நடித்த தலைவா படத்திலும் இவர் நடித்திருந்தார். பின்னர், தமிழில் மெகாஹிட் அடைந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தற்போது, இவர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் விஜய் படத்தின் வில்லன் நடிகர்..!

சிவா இயக்கத்தில் இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏற்கனவே நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ்  ஆகியோர் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரஜினிகாந்த் அல்லாத பிற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

chiyaan | ஒரே படப்பிடிப்பு தளம் , இரண்டு பட ஷூட்டிங் - கெத்து காட்டும் சியான் விக்ரம்!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
Embed widget