‛பாஞ்சிடாம மெல்ல தாக்கு.... பாவம் சின்ன பள்ளத்தாக்கு’ சிம்புவை சீண்டும் ப்ளூசட்டை மாறன்!
Blue sattai maran: சிலம்பரசன் உருவக்கேலி செய்யாதீர்கள் என்று கூறியதற்கு ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
சிலம்பரசன் உருவக்கேலி செய்யாதீர்கள் என்று கூறியதற்கு, ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு சிம்புவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.
விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டைப் பெற்றாலும், கதையின் நீளமும், இராண்டாம் பாதியில் அமைந்த சொதப்பலான திரைக்கதையும் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை, முதல் காட்சி முடிந்த உடனே பார்க்க முடிந்தது. இருப்பினும் ஒரு சாரருக்கு படம் பிடித்திருந்தது.
View this post on Instagram
இந்த நிலையில் படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சிலம்பரசன், “ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன்.. எனது முந்தைய படங்களில் எனது எடையை வைத்து கேலி செய்தவர்களால் இந்தப்படத்தில் அதை செய்ய முடியவில்லை என்று பேசி இருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
உருவ கேலி செய்வது தவறு - சிம்பு.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 19, 2022
Kuththu 2004 Movie - Pottu Thaakku song lyrics:
பாஞ்சிடாம மெல்ல தாக்கு. பாவம் சின்ன பள்ளத்தாக்கு.
Body shaming the women with cheap lyrics. What is the meaning for பள்ளத்தாக்கு.. Mr. Simbu? Don't put the blame on lyricist alone. pic.twitter.com/MTuPcwt2yh
அந்தப்பதிவில், “உருவ கேலி செய்வது தவறு என சிம்பு சொன்னதை குறிப்பிட்டு குத்து படத்தில் இடம் பெற்ற போட்டுத்தாக்கு பாடலில் இடம் பெற்ற ‘பாஞ்சிடாம மெல்ல தாக்கு. பாவம் சின்ன பள்ளத்தாக்கு’ வரிகளை குறிப்பிட்டு, பெண்களை இவ்வளவு கீழ்த்தரமான வரிகளால் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். பள்ளத்தாக்கிற்கு என்ன பொருள் மிஸ்டர் சிம்பு. பாடலாசிரியர் மீது மட்டும் பழிபோட வேண்டாம்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.