மேலும் அறிய

Biggboss Ultimate : தன் அழகை தானே வர்ணித்த ரம்யா பாண்டியன்... கடுப்பில் சாண்டி மாஸ்டர் செய்த காரியம்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல சாண்டி மாஸ்டர் மற்றும் "கலக்கபோவது யாரு" புகழ் தீனா வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்குகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தமிழ்நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆவார்கள். பிக்பாஸ் ஷோவிற்கு கிடைத்த வரவேற்பால் பிகபாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் விலகலுக்கு பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதனால், பிக்பாஸ் அல்டிமேட்டின் டி.ஆர்.பி. எகிறி ரசிகர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த விறுவிறுப்புக்கு மேலும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்றும் விதமாக தற்போது சாண்டி மாஸ்டர் மற்றும் "கலக்கபோவது யாரு" புகழ் தீனா வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்குகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ஏலம் : 

முதலில் "கலக்கபோவது யாரு" புகழ் சதீஸ் முதல் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது என்று புரியவில்லை என்றும், எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியவில்லை என்றும் கூறிவருகிறார். இந்தநிலையில், தற்போது சாண்டி மற்றும் தீனா களமிறங்கியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் சாண்டி மற்றும் தீனாக்கு பிக்பாஸ் ஒரு அல்டிமேட் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்களை பற்றிய குணநலன்களை சொல்ல வேண்டும். இதைகேட்டு இம்பிரஸ் ஆகி சாண்டி மற்றும் தீனா ஏலத்தின் மூலம் தங்களது பக்கம் எடுத்துக்கொள்வர். அப்படி இருக்கையில் ஒவ்வொரு போட்டியாளர்கள் தங்களை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும்போது ரம்யா பாண்டியன் மட்டும் பன்ச் போன்று ஒரு வாக்கியத்தை பேசினார். கையில் இருக்குது நெகம்.. எனக்கு இருப்பதே அழகிய சிரித்த முகம் என்றார். இதைகேட்டு சாண்டி உடனே இந்தாடா தீனா ரம்யாவ நீயே எடுத்துக்கோ என்று சொல்ல, தீனாவும் சாண்டியிடம் எனக்கு வேணாம் என்று ஓடிவிடுவார். அந்த ஏலமே கலகலப்பாக செல்ல, அத்துடன் அந்த ப்ரோமோவும் முடிந்தது. தற்போது, இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget