Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!
முக்கியமான போட்டியாளர் இல்லை என்பதால், ஓவியாவுக்கு நிகராக வேறு ஒரு பிரபல போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் குழு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ஐ அடுத்து ஓடிடியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஓவியாவின் வரவை எதிர்ப்பார்த்துதான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகாக 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர மற்ற பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் 24*7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் சீசன் 5-ன் இறுதிபோட்டியன்று வெளியிட்டார்.
மேலும் படிக்க: எல்லாத்தையும் ஓரம் கட்டும் கயல்.. கதை இப்படினா ரீச் இப்படிதான்! இது சீரியல் டிஆர்பி!
தொலைச்ச இடத்துல தான தேட முடியும்..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 17, 2022
தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..
This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! 😎 #BBUltimate pic.twitter.com/FIs7O3GUky
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்