Biggboss Tamil 5 | இங்க யாரும் பிச்சை எடுக்குற வாழ்க்கை வாழல... அக்ஷராவை விமர்சித்த ப்ரியங்கா..!
இங்க யாரும் பிச்சை எடுக்குற வாழ்க்கை வாழல..கதை சொல்லட்டா டாஸ்க்கில் அக்ஷரா பேசிய விஷயங்களை ப்ரியங்கா விமர்சித்தார்.
![Biggboss Tamil 5 | இங்க யாரும் பிச்சை எடுக்குற வாழ்க்கை வாழல... அக்ஷராவை விமர்சித்த ப்ரியங்கா..! Priyanka Deshpande Criticising Akshara Reddy Model Biggboss Tamil 5 | இங்க யாரும் பிச்சை எடுக்குற வாழ்க்கை வாழல... அக்ஷராவை விமர்சித்த ப்ரியங்கா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/13/90d8bebe5f0468e5157b5c4c67fa2240_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்று கதை சொல்லட்டா டாஸ்க்கில் அக்ஷரா கதைசொல்ல ஆரம்பித்தார். "பணம், வசதி என வசதியான வாழ்க்கை இருந்தும் 11 வயதில் அப்பாவை இழந்தேன். அப்போதிலிருந்து அண்ணனும், அம்மாவும் எனைத் தாங்குகிறார்கள்” எனச் சொன்னார் அக்ஷரா. வேறு நாட்டில் சென்று ப்யூட்டி பேஜண்ட்டில் ஜெயித்ததாகவும் சொன்னார். அந்த கதை தன்னை இன்ஸ்பயர் செய்யாததால் டிஸ்லைக் கொடுத்தேன் என்றார் ப்ரியங்கா. “இங்க யாரும் பிச்சையெடுக்குற வாழ்க்கை வாழல. ஆனா அந்த வசதியான வாழ்க்கையில் கிடைத்த விஷயங்கள மட்டும் சொல்லாம, அவங்களுக்கு என்ன குறிக்கோள்னு சொல்லியிருக்கலாம்” என நினைத்ததாக சொன்னார் ப்ரியங்கா.
அழுது அழுது சொன்ன கதைகளை பிடிக்கவில்லை என்று சொன்ன ராஜு, முதல் ஆளாக அக்ஷராவுக்கு லைக்கை குத்தினார். உன்னை எனக்குப் பிடிக்கும். நீ என் கதைகளை ரசிப்பதால் உன் கதைக்கு லைக் போட்டேன் என அக்ஷராவிடம் சொன்னார். ப்ரியங்காவும் சிறு வயதில் அப்பாவை இழந்த கதையையும், அவருக்கு ரயிலில் உதவி இல்லாமல் இறந்ததால், நான் யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் இருப்பேன் என்றார். ப்ரியங்காவின் கதை பிடிக்கவில்லை என டிஸ்லைக் குத்தினார் ராஜு. ரைட்டு போர் ஆரம்பம்.
View this post on Instagram
இன்றைய 3-வது ப்ரோமோ...
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)