![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Biggboss Tamil 5 | சர்க்கரை கம்மியா போடணுமா.. வாவ் சொல்லி சாப்டீங்களே, நல்லா இருந்துச்சா.. அண்ணாச்சி மீது பாய்ந்த அபிஷேக், ப்ரியங்கா
Biggboss Tamil Season 5 | சர்க்கரை தீர்ந்துவிட்டது கொஞ்சம் கம்மியா செலவு பண்ணலாம் என இமான் சொன்னதும், ப்ரியங்காவும், அபிஷேக்கும் அவர் மீது பாய்ந்தார்கள்
![Biggboss Tamil 5 | சர்க்கரை கம்மியா போடணுமா.. வாவ் சொல்லி சாப்டீங்களே, நல்லா இருந்துச்சா.. அண்ணாச்சி மீது பாய்ந்த அபிஷேக், ப்ரியங்கா Biggboss Tamil Season 5 Episode 21 abishek priyanka corners Imman Annachi Biggboss Tamil 5 | சர்க்கரை கம்மியா போடணுமா.. வாவ் சொல்லி சாப்டீங்களே, நல்லா இருந்துச்சா.. அண்ணாச்சி மீது பாய்ந்த அபிஷேக், ப்ரியங்கா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/23/b4b94a675b53a53dd42ebb90782c76f2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Biggboss Tamil 5 Episode 21
விஜய் டிவியில், பிக்பாஸ் சீசன் 5 பயங்கர பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு. இன்று சீசன் 5-இன் எபிசோட் 22. வார இறுதி எபிசோடுக்கு ஏற்கனவே ரசிகர்கள் குஷியாகிட்டாங்க.
View this post on Instagram
வரும்போது பீடிகையோடு வந்த கமல், நிறைய மாத்தி மாத்தி பேசுறாங்க. நீங்களே அவங்களுக்கு பதில் சொல்லிடுங்க என்றார். நாணயம் எடுப்பதற்கு தாமரைச்செல்வியையும், சின்னப்பொண்ணுவையும் வைத்து விளையாடியதைப் பற்றி கேள்வி கேட்டார் கமல். உங்களுக்காக யாருமே விளையாடவில்லையா என சர்காஸம் பண்ணார்?
சர்க்கரை கொஞ்சம் கம்மியா செலவு பண்ணுங்க என அண்ணாச்சி சொன்னதும், சரக்கென ப்ரியங்காவும், அபிஷேக்கும் அவர்மீது பாய்ந்தார்கள். மெதுவா பேசு என சொன்ன ராஜுவையும் புரட்டி எடுத்தார் அபிஷேக். “நான் ரொம்ப சாதாரணமா சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தா, மன்னிப்பு கேக்குறேன்” என சொன்னதும், எல்லோரும் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
தாமரையைக் காப்பாற்றி பஞ்சதந்திரம் கேமில் தியாகியாக பார்த்தீர்களா என எல்லாரையும் கமல் கேட்டதும், தியாகி ஆகணும்னா அதுக்கு தனி ஸ்ட்ராட்டஜி இருந்திருக்கும் என கமலுக்கே டஃப் கொடுத்தார் அபிஷேக். பாவம் அபிஷேக், தன் நிலைமை என்னவென தெரியாமல் வாயாடிக்கொண்டிருந்தார். "இங்க யாருமே வீக், ஸ்ட்ராங் கண்டென்ஸ்டென்ஸ் இல்ல. threat, Non threat தான் கேமே இருக்கு” என்றார். அப்படி சொல்றீங்களா? அப்படின்னா யார் அந்த ஜோன்ல இருக்காங்க எனக் கேட்டதும், “இப்போ குழந்தைங்களுக்கு டாச்க் வெச்சா இமான் அண்ணாச்சிதான் ஜெயிப்பாரு” என்றார். கமல், குழந்தைங்கன்னு சொன்னதால கேக்குறேன். குழந்தைங்களை கூட்டிட்டு வந்துட்டாங்கப்பா என சொன்னீர்களே என்றார். வழக்கம்போல அபிஷேக் சமாளித்தார்.
ராஜூ மோகனின் விளையாட்டை பாராட்டினார் கமல்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)