Biggboss Tamil Episode 2 | கண்ணீர் கடலில் பிக்பாஸ் வீடு.. ராஜுவின் கண்டெண்ட்டும், பிக்பாஸின் ஸ்கெட்ச்சும்..!
”கலைஞர்கள் கவலைய காட்டக்கூடாது. உங்க பாட்டு டச் பண்ண மாதிரி உங்க கதைகள் என்ன ஒன்னும் பண்ணல” என்றார் ராஜுமோகன்
ஆரம்பமே ஒரு ஜாலி டான்ஸ். முந்தைய பிக்பாஸ் எபிசோட்ஸ் போல எல்லோரும் டான்ஸ் மாஸ்டர்கள் மாதிரி வரிசையாக ஆடாமல் கன்னாபின்னாவென கலைந்து கலைந்து ஆடுகிறார்கள். ஆனால் அதுதான் ஒரிஜினலாக இருக்கிறது. 18 பேர் மொத்தமாக இருப்பதால், இன்னும் கூட திடீரென்று இவர் கண்ணதாசா ஜேசுதாஸா என பெயர் குழப்பம் வேறு வந்து தொலைக்கிறது.
ப்ரியங்கா எல்லோருக்கும் சீரியல் வாய்ஸில் பேச வேண்டும் என ஆர்டர் போடுகிறார். உடனே எல்லோரும் லைட்டாக ட்ரை செய்தார்கள். சுத்தமாக முடியவில்லை. பின்பு அவரே தேங்காய் எண்ணெயில் ஆம்லெட் போடுகிறேன் என ஹஸ்கி வாய்சில் பேசி பேலன்ஸ் செய்துவிட்டார். சரி நான் ஆம்லெட் போடுகிறேன் என பாத்ரூம் பக்கம் போன ப்ரியங்காவை ராஜு கலாய்க்கிறார். இந்தத் தம்பி இன்னும் கொஞ்ச நாளில் யாரிடமோ மொத்து வாங்குவார் என்பது லைட்டாக லிப்பாலஜி என்னும் ஜப்பான் ஜோசியத்தில் தெரிகிறது.
ஐய்க்கி, இமான் அண்ணாச்சிக்கு Hey Wassup man, எனச்சொல்லி eye symbol காட்டும் மேனரிசம் சொல்லித்தருகிறார். அண்ணாச்சி Whatsapp என்கிறார். பேட்டா எங்கம்மா கொடுக்கிறாங்க மோடில் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். தென் தமிழகத்தில் பிறந்த அண்ணாச்சியும், மலேசியத் தமிழ் ஐய்க்கியும் பேசி, அதை நாம் புரிந்துகொள்வதுதான் பிக்பாஸ் நமக்குக் கொடுத்திருக்கும் டாஸ்க். ஆனா இந்த டாஸ்க் நல்லா இருக்கு.
சிபியை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுகிறார் பிக்பாஸ். கிட்னி உருவப்போவது தெரியாமல் துள்ளிக்குதித்து ஓடுகிறார் சிபி. ஒரு டாஸ்க் பேப்பரைக் கொடுத்து எல்லாருக்கும் படித்துக்காட்ட சொல்கிறார். வெளியில் போனதும் அந்த டாஸ்க்கை அறிவிக்கிறார் சிபி. “பிரபஞ்சமே கதைகளால் ஆனது. இங்க எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கு. பிக்பாஸ் வீட்டுக்கும் ஒரு கதை இருக்கு. அந்தக் கதைகளை நீங்க சொல்லணும். பிடிச்சா லைக் சிம்பிள் கொடுங்க, பிடிக்கலன்னா டிஸ்லைக் கொடுங்க. ரொம்ப பிடிச்சுபோச்சு, மனசோட ஒன்றிப்போச்சுன்னா ஹார்ட் சிம்பிள் கொடுங்க” என கொடுக்கப்பட்டிருக்கிறது டாஸ்க். டாஸ்க் எழுதுறது கமல் சார்தானே உண்மையைச் சொல்லுங்க..
முதலில் இசைவாணியைக் கூப்பிடுகிறார் பிக்பாஸ். “அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை. திடீர்னு வேலையில்ல. என்ன பண்றது. காசு கொடுக்கமுடியாதே. வீட்டை விட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஒருவேளை சாப்பாடுதான் இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்னு அப்பா சாப்பிடமாட்டார்” என்றார் இசைவாணி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர். அடுத்து அதிரடியாக இசை பாடிய கானாவில் கண்ணீரெல்லாம் காலி. அடுத்ததாக சின்னப்பொண்ணு பேசினார். “தினமும் குடிக்கும் கூழைக் கொடுத்துவிட்டு, நெல்லுச்சோற்றை கேட்பேன்” என வாழ்க்கை முழுக்க வறுமை துரத்திய கதையைச் சொல்லிவிட்டு ஒரு நாட்டுப் பாடலை பாடினார். எல்லோரும் லைக்கும், லவ்வும் போட்டுக்கொண்டிருக்கும்போது, ராஜு எழுந்து போய் டிஸ்லைக் போட்டுவிட்டு, கலைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது. ஜெயிச்ச கதையைச் சொல்லணும் என்கிறார். பிழைப்பில் மண்ணை வாரி போட வந்த லகடபாண்டி என பிக்பாஸ் திட்டுவது காதில் விழுகிறது.
“வெற்றி நிச்சயம் வேத சத்தியம்” மட்டும் துணிச்சல் கிடையாது ராஜு ப்ரோ. கண்ணீரும், தன் அவலக் கதையைச் சொல்வதும் கூட துணிச்சல்தான்.
இசைவாணியின் கதை தனக்கு பொருந்தியதாக சொல்லி ஹக் செய்துகொண்ட ஐய்க்கிக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது. இன்று கொஞ்சம் கண்ணீர் ஓவர்டோஸ். சரி வீட்டுக்குள் வாஸ்து சரியில்லை என புல்வெளி வெராண்டாவுக்கு வந்தால், அங்கேயும் அம்மாவை நினைத்து அழுது ஒப்பாரி வைத்தார் அபிஷேக் ப்ரூ. எல்லோரும் தேற்றினார்கள்.
இப்போது வரை பிக்பாஸ் ஜன்னலில் நட்சத்திரம்தான் எட்டிப்பார்த்துக்கொண்டு லால்லா லால்லா சொல்லிக்கொண்டிருக்கிறது. நாளைக்கு பாக்கலாம் வெய்ட் கரோ.
Day 2 எபிசோட்: