![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Biggboss Tamil 5 | வீட்டு சாப்பாடு.. எமோஷன்ஸ்... அம்மா என அழுத ப்ரியங்கா, ராஜு பாய்
தீபாவளி பண்டிகைக்காக உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்காக வீட்டு சாப்பாட்டை வரவழைத்திருக்கிறார் பிக்பாஸ்
![Biggboss Tamil 5 | வீட்டு சாப்பாடு.. எமோஷன்ஸ்... அம்மா என அழுத ப்ரியங்கா, ராஜு பாய் Biggboss Tamil 5 Diwali Celebration Promo 1 Raju mohan and Priyanka in Tears Biggboss Tamil 5 | வீட்டு சாப்பாடு.. எமோஷன்ஸ்... அம்மா என அழுத ப்ரியங்கா, ராஜு பாய்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/04/a6e2dfb34f8b5b5533bc124dc5766d5c_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்று முதல் ப்ரோமோ வெளியானதும் களைகட்டியது. தீபாவளி பண்டிகைக்காக உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்காக வீட்டு சாப்பாட்டை வரவழைத்திருக்கிறார் பிக்பாஸ். சாப்பாட்டை பார்த்ததும் அம்மா என ப்ரியங்கா அழுதார். ராஜுவும் கண்கலங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக்கை அடுத்து சின்னப்பொன்னு மூன்றாவதாக எலிமினேட் ஆகியிருக்கிறார்.
32வது நாளான இன்றைய எபிசோடிலும், சினிமா சினிமா லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்தது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை ஏற்று அதற்கு ஏற்ற பாடல் இசைக்கும்போது நடனமாடினர். சிறப்பாக ஆடியதாக மதுமிதாவும், ராஜூவும் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் அனைவரும் சிறப்பாகவே பர்ஃபாம் செய்ய, நீலாம்பரியாக நடனமாடிய அக்ஷரா அவ்வளவு கவனம் ஈர்க்கவில்லை என அண்ணாச்சி கொளுத்திப்போட, வீட்டிற்குள் சண்டை தொடங்கியது. அக்ஷரா கண் கலங்க, அண்ணாச்சி சமாளிக்க சினிமா சினிமா டாஸ்க்கும் ஒரு சண்டையில் முடிந்தது. அதனை அடுத்து, நிரூப்பிற்கும் - பாவனிக்கும் கருத்து வேறுபாடு இருக்க, சில டிரமாடிக் வாக்குவாதத்திற்கு பிறகு மீண்டும் சரியாக பேச தொடங்கினார்கள் அவர். மொத்தத்தில், அதே டாஸ்க், சண்டை, வாக்குவாதம்! கொஞ்சம் சிரிப்பு, திறமையின் வெளிபாடு என ஜாலியாக முடிந்தது நேற்றைய எபிசோட்.
View this post on Instagram
நேற்றைய கடைசி ப்ரோமோ..
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)