(Source: ECI/ABP News/ABP Majha)
BiggBoss 5 Tamil Promo: பாவனி - ராஜூ மோதல் ஓவர்...சண்டையில்லாத ப்ரொமோ! பிக் பாஸ் நிகழ்ச்சியா இது?
கடந்த சில வாரங்களாகவே பாவனிக்கு, ராஜூவுக்கும் மோதல் நிலவி வந்த நிலையில், இன்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.
Bigg Boss 5 Tamil Day 68: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை அடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மீண்டும் அபிஷேக் எலிமினேட்டாகி வெளியேறி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று நடைபெற்ற தலைவருக்கான போட்டியில் அமீர் வெற்றி பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டபோது பாவனி நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டிப்பறித்து கொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 68வது நாளுக்கான முதல் ப்ரொமோ வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பாவனிக்கு, ராஜூவுக்கும் மோதல் நிலவி வந்த நிலையில், இன்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உட்கொண்டனர். அப்போது, நெகிழ்ச்சியான பாவனி, திடீரென்று எழுந்து சென்று ராஜூவை கட்டியணைத்து நன்றி கூறினார். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக, பாவனி இமான், நிரூப், சிபி என அனைவரையும் கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். இதனால், நீண்ட் நாட்களுக்கு பிறகு பிக் பாஸில் சண்டை இல்லாத ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகி இருப்பது சஸ்பென்ஸை அதிகரித்திருக்கிறது.
ப்ரொமோ:1
#Day68 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/iN9lp39pB4
— Vijay Television (@vijaytelevision) December 10, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்