மேலும் அறிய

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

Bigg Boss 9 Tamil Contestants List With Photos: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் முழு பட்டியலைப் பார்க்கலாம்

பிக்பாஸ் 9 தமிழ் 

விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் 9 ஆவது சீசன் இன்று கோலாகமலாக துவங்கியுள்ளது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ

1. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

ஆரம்பமே அமர்க்களம் என்பது போல் பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நுழைந்துள்ளார். இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவரும் கூட. 

2 . அரோரா சின்க்ளேர்

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

பலூன் அக்கா என்று பரவலாக அறியப்பட்டுபவர் அரோரா சென்க்ளேர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தாவரவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தனது 21 வயதில் மாடலிங் கரியரில் அடியெடுத்து வைத்த இவர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளார். 

3.எஃப்.ஜே

மூன்றாவது போட்டியாளராக ராப் பாடகர் எஃப் ஜே பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இவர் ஒரு பீட் பாக்ஸ் கலைஞரும் கூட.  விவசாயிகள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக தனது பாடல்களை எழுதி பாடுவது இவரது தனித்துவம் 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

4.வி.ஜே பார்வதி 

நான்காவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவர் வி.ஜே பார்வதி. யூடியுப் சேனலில் பிராங் ஷோக்களில் பிரபலமான வி.ஜே பார்வதி தற்போது சின்னத்திரை பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவருடைய ஆடை தேர்வுகளுக்காக பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் மிகவும் துணிச்சலாக தன் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி வருகிறார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

5. துஷார்

5 ஆவது போட்டியாளர் துஷார் ஜெயபிரகாஷ். தோற்றத்தில் கொரியன் பையன் மாதிரி தெரிந்தாலும் இவர் ஒரு சுத்த தமிழன். பெற்றோர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். நடிகனாக வேண்டும் என்பது இவரது ஆசை. சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனின் பெரிய ரசிகர். பிஸ்னஸ் மார்கெட்டிங் முடித்து வேலை செய்துகொண்டிருந்த இவருக்கும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

6. கனி

கனி திரு, இயக்குநர் அகத்தியனின் முதல் மகள், பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2-ல் போட்டியாளராகப் பங்கேற்று, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனவர். தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நடிகையாகவும், தொலைக்காட்சி ஆளுமையாகவும் அறியப்படும் இவர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார்.  

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

7. சபரி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் ரசிகர்களிடம் கவனமீர்த்தவர் நடிகர் சபரி. இந்த சீரியலில் பலர் இவரை வேலனாக அடையாளம் கண்டனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் லட்சியத்தோடு பிக் பாஸ் வீட்டில் 7 ஆவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சபரி

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

8. பிரவீன் காந்தி

நடிகராக வேண்டும் என்கிற கனவோடு சினிமாவிற்குள் வந்தவர் பிரவீன் காந்தி. ஆனால் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாததால் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இதனால் இயக்குநர் பிரியதர்ஷனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு   ரட்ச்சகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான நாகர்ஜூனா , உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் நடிக்க வைத்து ஏ ஆர் ரஹ்மானை இசையமைக்க வைத்தார். இப்படம் மிகப்பெரியளவில் கமர்சியல் வெற்றிபெற்றது மட்டுமில்லாமம் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது முன்னணி இயக்குநர்களான ஏ.ஆர் முருகதாஸ் , எஸ்.ஜே சூர்யா , எங்கேயும் எப்போதும் சரவணன் , சக்தி செளதர்ராஜன் ஆகியோர் பிரவீன் காந்தியிடன் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

9 .கெமி

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் . பாஸ்கெட் பால் வீராங்கனை. இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பார்வயாளராக தனது பயனத்தை தொடங்கி நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்துள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

10 ஆதிரை

திருப்பூரைச் சேர்ந்த ஆதிரை விஜயின் பிகில் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கொரோணா நொய்த் தொற்று முட்டுக்கட்டையாக அமைந்தது. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 ஆவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

11. ரம்யா ஜோ

மைசூரைச் சேர்ந்த ரம்யா ஜோ பெங்களூரில் வளர்ந்தவர். தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறார். ரம்யாவின் பெற்றோர்கள் பிரிந்து சென்றதால் சின்ன வயதில் இருந்து ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரம்யா ஜோ. பொருளாதாரா சூழலை சமாளிக்க மேடைகளில் நடன்மாடும் குரும் டான்ஸராக பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் 11 ஆவது போட்டியாளராக ரம்யா ஜோ பங்கேற்றுள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

12.வினோத் குமார்

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா இசை கலைஞர் வினோத் குமார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

13 வியானா

ஏர் ஹாஸ்டஸாக பணி புரிந்து வந்த வியானா மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல் 

14.பிரவீன் 

நடிகர் , பாடகர் , என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரவீன். 7 மொழிகள் பேசக்கூடியவர்.  சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது இவரது ஆசை. சின்ன மருமகள் , சிந்து பைரவி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

15. சுபிக்‌ஷா

தூத்துக்குடியைச் சேர்ந்த சுபிக்‌ஷா  மீனவர் மற்றும் விலாக்கர் . கடலுணவு சார்ந்த வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

16. அப்சரா சி ஜே

கன்யாகுமரியைச் சேர்ந்த பிரபல மாடல் திருநங்கை அப்சரா சி.ஜே. 2013 ஆம் ஆண்டு தாய்லாந்தில் இந்தியா சார்பாக மிஸ் இண்டர்நேஷ்னல் குயின் பட்டம் வென்றவர். மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

17. நந்தினி 

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா விபத்தில் உயிரிழந்துவிட்டார். அம்மா புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். மன உளைச்சலில் இருந்து வெளியே வர யோகா பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

18.விக்கல்ஸ் விக்ரம் 

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தொடங்கி ஸ்டாண்ட் அப் காமெடி முதல் பல திறமைகளை கோண்டவர் விக்ரம். இன்ஸ்டாகிராமில் விக்கல்ஸ் வெளியிட்ட ரீல்ஸை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ரிகிரியேட் செய்து வெளியிட்டுள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

19. கமருதின் 

கமருதின் சென்னையைச் சேர்ந்தவர். நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் தான் பார்த்து வந்த ஐடி வேலையை விட்டு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மலையாளத்தில் நிவின் பாலி நயன்தாரா நடித்துள்ள டியர் ஸ்டுடண்ட்ஸ் படத்தில் நடித்துள்ளார். 

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

20 கலையரசன் 

தேனி மாவட்டம் போடி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன். டிக்டாக் முதல் இன்ஸ்டாகிராம் வரை பிரலமாக அறியப்படுபவர் அகோரி கலையசன். நாட்டுப்புற கலைஞரான இவர் இலவசமாக குழந்தைகளுக்கு நாட்டுப்புற கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளில் காரணமாக  அகோரியாக சுற்றித் திரிந்தார். இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்தார். பின் அகோரி வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து   தனது காதல் மனைவியை பிரிந்தார். தற்போது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் .

Bigg Boss 9 Tamil Contestants: 20 போட்டியாளர்கள்...சர்ச்சைக்கு பஞ்சமில்லை..பிக்பாஸ் 9 தமிழ் போட்டியாளர்கள் முழு பட்டியல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget