மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ‛திடீர் திடீர்னு உடையுதாம்... சாயுதாம்...’ முதல் நாளே பிக்பாஸ் வீட்டை பீதியாக்கும் ரஜிதா!

Bigg Boss 6 Tamil: இதைக் கேட்ட அந்த நான்கு பேரும் பீதியடைந்தனர். ‛நாம் வெளியில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்... இவர் இப்படி சொல்கிறாரே’ என அவர்களுக்குள் பீதியடைந்தனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில், கடந்த முறை ஒளிரப்பான பிக்பாஸ் அல்டிமேட் போலவே, இந்த சீசனும் முழுவதும், 24 மணி நேர ஒளிபரப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல்நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள், அவர்களின் உடைமைகளை எடுத்த வைக்கவும், அவர்களுக்கான படுக்கையை தேர்வு செய்வதிலும் இரவு நேரத்தை செலவு செய்தனர்.

முன்னதாக , முதல் டாஸ்க் படி, விக்ரமன், நிவா, குயின்ஸி, ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வீட்டின் வெளியே உறங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நான்கு பேரும் நேரடியாக எலிமினேஷனில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் ஏதாவது மாற்றம் வரலாம் என தெரிகிறது. 

இது ஒருபுறமிருக்க, முதல்நாள் இரவு முடிந்து மறுநாள் காலையில் தங்களின் பணியை தொடங்க தயாராகினார்கள் போட்டியாளர்கள். குறிப்பாக, வீட்டின் வெளியே உறங்கிய விக்ரமன், நிவா, குயின்ஸி, ஜனனி ஆகியோர் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அதற்கு காரணம், அவர்களால் வெளியில் கொசுக்கடியில் சரவர உறங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று தான், அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்துவிட்டனர். 

இது ஒருபுறமிருக்க, நீண்ட கலாட்டா, கிண்டல் என வீட்டிற்கு உள்ளே இன்னும் ஜாலி மோட் அதிகம் இருந்தது. இதனால், அனைவரும் விடிந்தும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஆனால், சீரியல் நடிகை ரஜிதா மட்டும் சீக்கிரமே எழுந்துவிட்டார். அவரிடம் ஏன் சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள் என வெளியில் இருந்த நான்கு பேரும் கேட்ட போது, 

‛என்னால் உறங்க முடியவில்லை. உறங்கும் போது நிறைய சத்தங்கள் கேட்டது. திடீரென ஜி.பி.முத்து சிரிப்பது போன்று சத்தம் கேட்டது; எழுந்து பார்த்தால் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். இது போல் இன்னும் பலரின் சத்தங்கள் கேட்டன; எழுந்து பார்த்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை எடிட்டிங் பணியிலிருந்து சத்தம் வருகிறதா என்று தெரியவில்லை; ஆனால், என்னால அந்த சத்தத்தில் உறங்க முடியவில்லை’ என்றார் ரஜிதா. 

இதைக் கேட்ட அந்த நான்கு பேரும் பீதியடைந்தனர். ‛நாம் வெளியில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்... இவர் இப்படி சொல்கிறாரே’ என அவர்களுக்குள் பீதியடைந்தனர். குறிப்பாக, இதைக்கேட்டதும் அவர்களின் முகமே மாறிவிட்டது.  பிக்பாஸ் வீட்டில் இது போன்ற அமானுஷ வதந்திகளை அவ்வப்போது போட்டியாளர்கள் எழுப்பி பார்த்திருக்கிறோம். ஆனால் ,முதல் நாளே இந்த பிரச்சனை எழுந்தது, சக போட்டியாளர்களை பீதியடைச் செய்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget