மேலும் அறிய

Bigg Boss Tamil 7: தொடங்கிய 'டிக்கெட் டூ ஃபினாலே' டாஸ்க்.. பிக்பாஸ் வீட்டில் இனி ரணகளம் தான்!

Bigg Boss Tamil 7: பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் இன்றைய பிக்பாஸ் எபிசோடில் தொடங்குகிறது.

Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 72ஆவது நாளை இன்று எட்டியுள்ள நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இன்று தொடங்கியுள்ளது.

பொதுவாக இறுதி 2 அல்லது 3 வாரங்களில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கும். இதில் ஜெயிப்பார்கள் நேரடியாக இறுதி வாரத்துக்குள் நுழைவார்கள். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்னும் 5 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில், சற்று முன்கூட்டியே இந்த டாஸ்க் தொடங்கியுள்ளது.

அதன்படி இன்றைய எபிசோடில் மனித கடிகாரமாக மாறி பிக்பாஸ் போட்டியாளர்கள் குழுக்களாகப் பிரிந்து நேரத்தைக் கணிக்கிறார்கள். மாயா, அனன்யா, பூர்ணிமா, அர்ச்சனா, மணி, ரவீனா என அனைவரும் இந்த ப்ரமோவில் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் பல டீம் சண்டைகள், தனிப்பட்ட மோதல்கள் கடந்து, தற்போது டாஸ்க்குக்காக குழுக்களாக பிரிந்து விளையாடும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வார்களா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

நேற்றைய எபிசோடில் விஷ்ணு - பூர்ணிமா இடையிலான பிரச்னையை அர்ச்சனா தீர்த்துவைத்த நிலையில், இருவரும் சமாதானமாகினர். மேலும் இந்த வார கேப்டனாக மணி தேர்வாகியுள்ள நிலையில், ரவீணா மணியின் பல முடிவுகளில் தொடர்ந்து இரண்டாவது குரலாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வார கேப்டன் மணியா அல்லது ரவீணாவா என விசித்ரா கேட்டுவிட, அதன்பின் இனி கொஞ்சம் குறைவாக பேசும்படி மணி அறிவுறுத்துகிறார். மேலும் ஷாப்பிங் டாஸ்க்கில் விஷ்ணு , கூல் சுரேஷ் இருவரும் அனுப்பப்பட, விஷ்ணு சர்க்கரை உள்ளிட்ட சில பொருள்களை விட்டு வந்ததால் வருத்தப்படுகிறார்.

சென்ற வாரம் விஷ்ணு கேப்பிடன்ஸியில் பிக்பாஸ் வீட்டில் முட்டல் மோதல்களும் அதிகரித்த நிலையில், வார இறுதியில் கமல் எபிசோடில் பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் விஷ்ணுவை கேள்விகளால் துளைத்தார் கமல்.

ரேஷன் பொருள்கள் கேப்டன் சரியாகக் கையாளவில்லை, எண்டர்டெய்ன்மெண்ட் இல்லை, பாரபட்சம் பார்க்கிறார், கேப்டனாக இருந்து கொண்டு கேங்க் சேர்ந்து விளையாடுகிறார் என விஷ்ணு மீது அடுக்கடுக்கான புகார்களை போட்டியாளர்கள் பதிவு செய்து வந்தனர். விஷ்ணுவின் முன்கோபம் அவர் கேப்டன் என்பதைத் தாண்டி சென்ற வாரமும் எட்டிப்பார்க்க, அதுவே அவருக்கு பின்னடைவைத் தந்தது. மேலும் கமல்ஹாசனிடமும் விஷ்ணு தன் செயல்களை நியாயப்படுத்தி வாதிட, கமல் பொரிந்து தள்ளிவிட்டார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் செம்ம அப்செட்டில் இருந்த விஷ்ணுவை பிக்பாஸே ஆறுதல் தெரிவித்து ஊக்குவித்தார்.

மேலும் படிக்க: HBD Rajinikanth: அன்பிற்கினிய சூப்பர் ஸ்டாருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் தனுஷ் வரை.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்..

Google Year in Search 2023: கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடம் பிடித்த கியாரா அத்வானி - டாப் 10 லிஸ்ட் இதோ!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை; ’அப்பா’ ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக கேள்வி!
அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை; ’அப்பா’ ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக கேள்வி!
முத்தையா மகன் நடிக்கும் சுள்ளான் சேது.. மாணவன் கையில் அரிவாள்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
முத்தையா மகன் நடிக்கும் சுள்ளான் சேது.. மாணவன் கையில் அரிவாள்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
ஈபிஎஸ் உடன் தங்கமணி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்
ஈபிஎஸ் உடன் தங்கமணி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்
Metro Fare Hikes: டிக்கெட் விலையை உயர்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம் - டெல்லி மக்கள் அதிர்ச்சி
Metro Fare Hikes: டிக்கெட் விலையை உயர்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம் - டெல்லி மக்கள் அதிர்ச்சி
Embed widget