மேலும் அறிய

Bigg boss Tamil 5 | Ep 4 | ராஜினாமாவா.. ராஜநாகமா.. சண்டைக்கு தூபம் போடுகிறாரா பிக்பாஸ் பெருசு..!

Bigg boss Tamil 5 | Day 3 | ப்ரியங்கா ஃபார்மில் இருக்கிறார். பிக்பாஸ் பெருசு எதுக்காக சின்னப்பொண்ணு அக்கா நைட்டிய களவாடுனீங்க என்கிறார். அடிக்கடி உசுப்பிவிடும் அபிஷேக்கை பிக்பாஸ் கொளுத்தி என்கிறார்

Bigg boss Tamil 5 - Day 3 

Day 3 Episode 5 - வாத்தி கம்மிங்கோடு ஆரம்பித்த நாள், தாமரைச்செல்வியின் சிரிப்போடு முடிந்தது. காலையிலேயே ஒரு பஞ்சாயத்து. ஆனா முடியும்போது மெசேஜோட முடிஞ்சது. டாய்லெட் சுத்தமா இருக்கா, இல்லையா எல்லாரும் கையைத் தூக்குங்கன்னு ராஜு சொன்னதும் சில பேர் கைகளைத் தூக்கினார்கள். (இந்த டாய்லெட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும்போலருக்கே) கொஞ்ச நேரத்தில் மழை வந்ததும் குஜாலான அபிஷேக், தமிழ் சினிமா ஹீரோயின்களைப் போல ஸ்டெப்ஸ் போட்டு மழையில் ஒரு ஆட்டத்தைப் போட்டார். ஐய்க்கி, மதுமிதாவெல்லாம் டான்ஸ் ஆட வந்துவிட்டார்கள். (மதுமிதா இங்கதான் இருக்கியாம்மா என்ற ஃபீலிங் வந்தது. அவரை இண்ட்ரொடக்‌ஷன் ரவுண்டில் பார்த்ததோடு சரி, கண்டெண்ட்டே கொடுக்கமாட்டேங்குற மா நீ... மொமெண்ட்)

“இனிமே டாய்லெட் போய்ட்டு வரும்போது சுத்தமா இல்லன்னா, இல்லன்னா... என ஒரு இழுவையை போட்டு, வெளியே வரும்போது சுத்தமாக்கிட்டு வந்துருங்க என்றார். நீ ஒரு ஸ்க்ரீன் ரைட்டர் ஆகிடலாம்டா என சிபி சொல்ல, ஏற்கெனவே அவன் ஒரு ஸ்க்ரீன் ரைட்டர்தாண்டா என அபிஷேக் சொல்கிறார். “ஆண்கள் நின்னுக்கிட்டு பெர்பாமன்ஸ் பண்ணாலும் டாய்லெட் சுத்தமா இருக்கணும்.  டாய்லெட் போகலாம் ஆனா சாணி போடக்கூடாது” என்கிறார் ராஜு. ஒரு படி மேலே போன ப்ரியங்கா, “எப்படி பெர்ஃபாமன்ஸ் பண்ணாலும், அந்த இரண்டு ஸ்லாபையும் சுத்தம் பண்ணிட்டு வரணும். அசிங்கம் பண்ணக்கூடாது” என்கிறார். ரொம்ப டீடெய்லிங்கா போய்க்கிட்டு இருக்குடா என்கிற மாதிரி எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதை நேரம் வந்ததும், எல்லாரும் அசெம்பிள் ஆனாங்க. இமான் அண்ணாச்சி அழவே இல்லை. காய்கறி வண்டியைத் தள்ளியும், மளிகைக் கடையில் வேலை செய்து 18 வருடம் கழித்து திரையில் வென்ற கதையைச் சொன்னார். 25 பவுன் போட்டுக்கிட்டு வந்த என் மனைவி ஏக்னெஸ் ப்ரியா எல்லாத்தையும் கழட்டி வித்துக்கொடுத்துச்சு. இப்போ அதுக்கு 100 பவுனா போட்டுட்டேன் என்று சொன்ன ஒன் லைனுக்கு அப்லாஸ் அள்ளியது. அபினய்யும், நடியாவும், நமிதாவும் டிஸ்லைக் கொடுத்துவிட்டார்கள். மூன்று பேருக்கும் அவரின் கதை கனெக்ட் ஆகவில்லையென்றார்கள். அண்ணாச்சி எங்குமே எமோஷன் காட்டவில்லை. அதுக்கும் சிரித்து வைத்தார் (பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்... தப்பாச்சே இது)

இமான் அண்ணாச்சி பேசும்போது சிரித்த நிரூப்பை, ஷ்ஷ்ஷ்ஷ் என கைக்காட்டினார் அபிஷேக் (சிரிச்சது குத்தமாடா) நிரூப் கொஞ்சம் சீரியதும், ‘எனக்கு பேசுறது டிஸ்டர்பா இருந்துச்சு. இனிமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்’ என தடாலடியாக பல்டி அடித்தார். நடுவில் வந்த சிபி, ரெண்டு பேர் மேலயுமே தப்பில்லடா, வேற வேற ஆங்கிள்டா என சம்மந்தமே இல்லாமல் பேசினார் (நல்லவனா இருக்கலாம் தம்பி.. இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது உனக்கு)

சுருதியின் வாழ்க்கை நிறைய புரிய வைத்தது. மிகச்சிறிய வயதில் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கை முழுக்க இரண்டாம் தரமாகவே நடத்தப்பட்ட கதையையும், இரண்டாம் தரமாக நடத்திய அப்பாவையும் பற்றிச் சொன்னார். எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். அப்பா செத்தப்போ, சந்தோஷமா இருந்தேன் என்னும் அந்த வார்த்தை, Abusive வாழ்க்கையின் அழுத்தத்தை காட்டியது. எல்லோருமே லைக்தான் கொடுத்திருந்தார்கள். ராஜு பாய் நீங்களுமா, உங்களுக்குத்தான் அழுதா பிடிக்காதே.. 

சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, எல்லாரையும் சாப்பிட வைக்க ப்ரியங்கா கஷ்டப்பட்டு சமைக்குது என்று அபிஷேக் சொல்ல, உனக்கு பிக்பாஸ் கொளுத்தின்னு பேர் கொடுக்கலாம்டா என்றார் ப்ரியங்கா. ஃபினாலேவுல உனக்கு பிக்பாஸ் கொளுத்தின்னு ஒரு விருது கொடுப்பாங்க என்றார் (தெருவுக்கா போறேள் டயலாக்தான் ஞாபகம் வந்தது)

பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நமிதாவை கரெக்ட் செய்றீங்களா பெருசு. போன முறை நிஷாவைக் கரெக்ட் பண்ணீங்க, இந்த முறை நமீதாவா என பெருசையே கலாய்த்தார் ப்ரியங்கா. ராஜினாமா பண்ணிட்டு போங்க பிக்பாஸ்னு சொல்றதுக்கு ராஜநாகம் என ரோல் ஆனது ப்ரியங்காவுக்கு. எம்.ஏ.. எம்.ஏ ஃப்லாசபி ஃப்லாசபி. மொத்தத்தில் ஒரு கலகல எபிசோட். நல்லா சோறு போடுறாங்க, ஏசியெல்லாம் இருக்கு. பரிமாற ஆள் இருக்கு. என்னை அனுப்பிடாதீங்க. வேணும்னா இமான் அண்ணாச்சியை அனுப்பி விடுங்கி என சொல்லிய தாமரைச்செல்விக்கு குட்டு வைத்தார் அண்ணாச்சி. எவ்வளவு நாள் கழிச்சு போனாலும் தாமரைச்செல்விக்கு இந்த அப்பாவித்தனம் போகக்கூடாது யேசப்பா. முதல் வாரத்தில் டாஸ்க்குகள் இல்லை. அதுவரையில் எல்லாரும் நல்லாத்தான் தூங்குவாங்க. குட் நைட் ட்யூட்ஸ்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget