Poornima Ravi: ’மாயா வீட்டுக்கு என் மகள் போகணுமா?’ - கொந்தளித்த பூர்ணிமா குடும்பம்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி ஆகியோர் இடையேயான உறவு குறித்து பூர்ணிமா குடும்பத்தினர் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பதிலளித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி ஆகியோர் இடையேயான உறவு குறித்து பூர்ணிமா குடும்பத்தினர் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பதிலளித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. இதுவரை 75 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி சந்திரா, ரவீனா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, கூல் சுரேஷ், நிக்ஸன் ஆகிய 11 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இறுதிக்கட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா, பூர்ணிமா இடையேயான நட்பு குறித்து பாசிட்டிவ் ஆகவும், நெகட்டிவ் ஆகவும் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பல வீடியோக்களும் வைரலாகி வருவது சர்ச்சையையும் கிளப்பியது. இப்படியான நிலையில் பூர்ணிமா குடும்பத்தினர் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றனர்.
அதில் அவர்களிடம், “மாயா, பூர்ணிமா நட்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பூர்ணிமா அம்மா, ‘நான் என்னை சுற்றியுள்ளவர்களிடம் கூட சொன்னேன். நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அவங்களோட உறவு ரொம்ப சூப்பர். நான் மாயாவை எப்போ பார்ப்பேன் என ஆவலாக காத்திருக்கிறேன். பிக்பாஸ் வீட்டில் என் பொண்ணுக்கு ஆறுதலா இருக்குற மாயாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என கூறினார்.
தொடர்ந்து பேசிய பூர்ணிமா அப்பா, ‘இன்னும் சொல்லவேண்டும் என்றால் மாயா என்னுடைய பொண்ணு மாதிரி. பூர்ணிமாவின் உடன் பிறவா சகோதரியாக தான் இருக்கிறாள்’ என கூறினார். அப்போது குடும்பத்தினரிடம், ‘பூர்ணிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மாயா வீட்டுக்கு போய் விடுவேன் என சொன்னாரே?..இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பேசிய பூர்ணிமா குடும்பத்தினர், ‘நாங்களும் அவளுடன் போய் விடுவோம். பூர்ணிமா இங்க இருக்கும்போதே எங்களுடன் பெரிதாக நேரம் ஒதுக்க மாட்டார். ஷூட் உள்ளிட்ட பல விஷயங்களில் பிஸியாக இருப்பார். நண்பர்கள் வீட்டுக்கு கூட எப்போதாவது தான் போவாள். ஆனால் அந்த நட்புறவு என்பது மாறாது. உனக்கு அம்மாவா? மாயாவா? என கேள்வி கேட்போம். இரண்டு பேரையும் வச்சுக்க என சொல்வோம். பூர்ணிமா மாயா வீட்டுக்கு போவதை விட, அவர் எங்க வீட்டுக்கு வர வந்தால் எல்லாம் ஒரே குடும்பம் தானே” என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Matthew Perry: மன அழுத்தத்தின் உச்சம்; மாத்திரை போட்டும் அடங்கவில்லை...மேத்யூ பெர்ரி உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்!