Bigg Boss 7 Tamil: ‘நீங்க லவ்வர்ஸ் தானே.. சந்தேகமா இருக்கு’.. விசித்ரா விசாரணையில் உண்மையை சொன்ன மணி - ரவீனா..!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்ரா, ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வி ஒன்றை ரவீனா தாஹா மற்றும் மணி சந்திராவிடம் கேட்டு பதிலைப் பெற்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்ரா, ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வி ஒன்றை ரவீனா தாஹா மற்றும் மணி சந்திராவிடம் கேட்டு பதிலைப் பெற்றுள்ளார்.
ரசிகர்களின் பேராதரவு பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியாக பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக சென்று கொண்டிருக்கிறது. இதில் டிவியில் ஒளிபரப்பாகாத பல நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக வைரலாகி வருகிறது.
நடப்பு சீசனில் மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பலரும் பங்கேற்றனர். இதில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேறினார். தொடர்ந்து உடல் நலக்குறைவால் எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறினார்.
இம்முறை பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாக வீடு பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்களின் அலப்பறை தாங்க முடியாமல் சென்றூ கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதல் வாரமே மஞ்சள் கார்டு கொடுத்து வன்முறை பேச்சுக்காக முதல் வார கேப்டன் விஜய்யை எச்சரித்தார். மற்ற போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
#Vichitra audience mindla irukiradha opena kettutaanga #Biggbosstamil7 pic.twitter.com/QTJNxLuuo6
— Aadhik Sri (@aadhik_vet09) October 11, 2023
இப்படியான நிலையில் விசித்ரா போட்டியாளர்கள் ரவீனா தாஹா மற்றும் மணி சந்திராவிடம் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நீங்க நண்பர்கள்-ன்னு சொல்லி தானே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துருக்கீங்க.. ஆனால் நீங்க இரண்டு பேரும் லவ்வர்ஸ் தானே என விசித்ரா கேட்க, ‘இல்ல புரியல எனக்கு..மணி நீங்க கொஞ்சம் பேசுங்க’ என வெட்கப்பட்டு ரவீனா தாஹா சொல்கிறார். தொடர்ந்து, ‘நாங்க அப்படி சொல்லவே இல்ல’ என ரவீனா சொல்ல, ‘நாங்க ப்ரண்ட்ஸ்ல இருந்து போய்கிட்டு இருக்கோம்’ என மணி கூறினார். உடனே, ‘எங்க போய்கிட்டு இருக்கு?’ என ரவீனா மணியிடம் கேள்வி எழுப்பினார். ‘ப்ரண்ட்ஸா போறோம்’ என என பதில் சொன்னார்.
ஆனால் விசித்ராவோ, ‘எனக்கு அப்படியெல்லாம் தெரியல’ என கூற, ‘நாங்க அப்படியெல்லாம் எங்கேயும் சொல்லவே இல்ல’ என ரவீனா தெரிவித்தார். ‘நீங்க பண்றதெல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே’ என விசித்ரா சரியாக கவுண்டர் கொடுத்தார். ‘உங்க பார்வை, அக்கறை எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு’ என சொன்னார். இதற்கு பதில் சொன்ன மணி சந்திரா, ‘நாங்க நிறைய நிகழ்ச்சி பண்றதுக்கு ஒன்னாவே போறோம்ல. அதனால் ஒரு புரிதல் இருக்கு. ஆனால் நீங்க பேசி பேசி வர வச்சிருவீங்க போல இருக்குதே’ என கூற, அவரை ரவீனா கன்னத்தில் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.