Bigg Boss 6 Tamil: முதல் நாளே விசிக விக்ரமன் உள்ளிட்டோருக்கு தண்டனை... பிக்பாஸ் விதியை மீறிய ஜனனி!
Bigg Boss 6 Tamil Promo: பிக்பாஸ் விதிகளை மீறி, வீட்டிற்குள் சென்றுள்ளார் ஜனனி!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.
தனி ஏவி, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்க்கும் முன்பே, டாஸ்க்கை தொடங்கிவிட்டார் பிக்பாஸ். போட்டியாளர்கள் அனைவரும் வந்ததும், அவர்களை அழைத்த பிக்பாஸ், அவர்களிலிருந்து இலங்கை போட்டியாளரான ஜனனியை அழைத்தார். அவரை ரகசிய அறைக்கு அழைத்து, டாஸ்க் குறித்த விளக்க குறிப்பை அவரிடம் வழங்கினார்.
#Day1 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/bZP1IfMU6w
— Vijay Television (@vijaytelevision) October 10, 2022
பின்னர் போட்டியாளர்களிடம் வந்த ஜனனி, அதிலிருந்த குறிப்பை வாசித்தார். அதன்படி, ‛போட்டியாளர்கள் சேர்ந்து நான்கு பேரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே உறங்குவார்கள் என்றும், அவர்கள் அடுத்த வார நாமினேஷனில் நேரடியாக பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.
வீட்டிற்குள் வந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், பிக்பாஸ் அறிவித்த இந்த டாஸ்க், போட்டியாளர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், முதல் டாஸ்க் என்பதால், அனைவரும் போட்டி போட்டு தங்கள் நியமனத்தை முன் வைத்தனர். அதில்
1.விக்ரமன்(விசிக)
2.ஜனனி
3.நிவா
4.குயின்ஸி
ஆகிய நான்கு பேருக்கு அதிக ஓட்டுகள் விழுந்தன. அதன் அடிப்படையில் வந்த முதல்நாளே இவர்கள் நான்கு பேரும் வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு ஒரு பெட்ஷிட் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இரவு முழுவதும் கொசுக்கடியில் சிரமப்பட்ட அவர்கள், மறுநாள் விடிந்ததும், தங்கள் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையில் பிக்பாஸ் விதிகளை மீறி, காலையில் வீட்டிற்குள் சென்றுள்ளார் ஜனனி. அவர் சில அலங்கார பொருட்களை எடுக்கச் சென்றார். அங்கு அவருக்கான பொருட்கள் வராததால், அழுதார். பின்னர், அங்கிருந்த மற்றொரு போட்டியாளரிடம் ‛லிப்ஸ்டிக்’ உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டார். தண்டனை பெற்றவர்களின் பொருட்கள் இன்னும் வீட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்றே தெரிகிறது. அதை வைத்து அவர்கள் வீட்டிற்குள் வருவார்கள் என்பதால், இந்த நூதன முடிவை பிக்பாஸ் எடுத்திருக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்