Bigg Boss 6 Tamil : என்னது மீண்டும் மீண்டுமா.. இன்னைக்கு சம்பவம் இருக்கு.. எதிர்பார்ப்பை கிளப்பிய பிக்பாஸ் ப்ரோமோஸ்!
Bigg Boss 6 Tamil : இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களை காணும் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணி நேர தொகுப்பில் சண்டை காட்சிகளை மட்டுமே பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதுமாக, டி.வி சேனலாக மாறி புது புது டாஸ்க்குகளை செய்ய போகிறது என்பதை இந்த வாரத்தின் துவக்கத்தில் வந்த ப்ரோவில் தெரிந்து கொண்டோம். அந்த வகையில், ராசி பலன்கள் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், டான்ஸ் ஷோ, ராம்ப் வாக் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த தொலைக்காட்சி ஷோ டாஸ்க் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் வன்மத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் வீட்டில், சில நபர்கள் மட்டுமே தொடர்ந்து அனைவரிடம் சண்டை போட்டு வருகின்றனர். இந்த லிஸ்டில், அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, ஆயிஷா ஆகியோர் அடங்குவர்.
#Day26 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ZZ5iB1VmIi
— Vijay Television (@vijaytelevision) November 4, 2022
அந்தவகையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மகேஸ்வரி, “நீங்க ரொம்ப நல்ல பேசுறீங்க அசிம்..” என்று சொன்னதிற்கு, “
உன்ன மாதிரி பேச எனக்கு தெரியாதுமா.. உங்களுக்கு நியூஸ் பற்றி என்ன தெரியும்.. நீங்க ஜட்ஜிங்ல ஜீரோ” என்று தடாலடியாக பேசிவிட்டார் அசிம்.
#Day26 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/U5zpcOPeeB
— Vijay Television (@vijaytelevision) November 4, 2022
அடுத்த வந்த ப்ரோமோவில், குயின்ஸியின் துண்டை, ஜனனி தெரியாமல் பயன்படுத்திவிடுகிறார். அவரின் டவலை யாரும் தொடமாட்டாங்க என குயின்ஸி சொல்கிறார். இதில் சற்று கடுப்பாகிய, ஜனனி குயின்ஸியிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார். பின்னர், அந்த துண்டை கழட்டி கீழே எறிந்துவிடுகிறார்.
#Day26 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/YFZ76tKyTM
— Vijay Television (@vijaytelevision) November 4, 2022
முதல் மற்றும் இரண்டாம் ப்ரோமோக்களில்தான் சண்டை, மீதம் உள்ள மூன்றாவது ப்ரோமோ எப்படி இருக்குமா என பார்த்தால் அதில், டிவி டாஸ்க்கில் மொக்கையாக பெர்ஃபார்மன்ஸ் செய்தவர் யார் என, பிக்பாஸ் கொளுத்தி போடும் ஒரு டாஸ்க்கை முன் வைக்கிறார். வழக்கம் போல், அனைவரும் மாற்றி மாற்றி குறை கூற ஆரம்பித்து விட்டனர். தினசரி சண்டையில் அட்டெண்டன்ஸ் போடும் தனலட்சுமியும் இதில் ஆஜர் ஆகிறார். ஆக, இன்று ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர தொகுப்பில் சண்டை காட்சிகளை மட்டுமே பார்க்க முடியும் போல.
பிக் பாஸ் போட்டியாளர் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.