Bigg Boss 6 Tamil: ரூ.11.75 லட்சத்துடன் வெளியேறிய அமுதவாணன்.. பிக்பாஸில் வாங்கிய மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் போட்டியாளர் அமுதவாணன் வெளியேறிய நிலையில், அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் போட்டியாளர் அமுதவாணன் வெளியேறிய நிலையில், அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.
Very happy for #Amudhavanan புத்திசாலித்தனமான best move even #biggboss wants you to take it 👍🏻first prize cashla பங்குனு பார்த்த u r second prize👏👏👏👏👏 pic.twitter.com/jRVqQKk0BI
— Actress - HarathiGanesh (@harathi_hahaha) January 20, 2023
மாஸ் காட்டிய அமுதவாணன்
விஜய் டிவி மூலம் பேமஸான அமுதவாணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நாள் முதலே சிறப்பாக செயல்பட்டார். அஸிம், விக்ரமுடன் மோதல், ஜனனியை தனது கட்டுப்பாட்டில் வைத்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் மல்லுக்கட்டுவார். அதேசமயம் தனது நகைச்சுவையின் மூலம் பிக்பாஸ் வீட்டிலும் கலகலப்பூட்டினார். அமுதவாணன் சீக்கிரமே பிக்பாஸில் இருந்து வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் டாஸ்க்கில் வென்று அசத்தினார்.
#Amudhavanan & #Rachitha about Vikku ❤️❤️ #Vikraman#AramVellum#WinnerVikraman #BiggBossTamil6 #VoteForVikraman #AbuserAzeem pic.twitter.com/OexSGpeUSF
— Kapes (@kapespapa) January 18, 2023
இறுதி வார போட்டியாளர்கள்
இதனிடையே இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரூ.3 லட்சம் பணத்துடன் விஜே கதிரவன் முதலில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரூ.11.75 லட்சம் பணத்துடன் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அமுதவாணன் தெரிவித்தார். அவர் கண்டிப்பாக முதல் 2 இடத்துக்குள் வரமாட்டார் என அனைவரும் கணித்திருந்தனர். அதனால் சக போட்டியாளர்களே அமுதவாணனின் முடிவை பாராட்டினர்.
அமுதவாணனின் சம்பளம்
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒருநாள் சம்பளமாக ரூ.25 என அவர் 103 நாட்கள் வீட்டில் இருந்ததற்கு ரூ.25 லட்சத்து 75 ஆயிரம் பெற்றதாகவும், பணப்பெட்டியில் இருந்த 11.75 லட்சம் சேர்த்து ரூ.37.50 லட்சம் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.