‛சாமி சத்தியமா.. என் கிட்னியை உங்க அம்மாவுக்கு தருவேன்’ அக்ஷராவிடம் சத்தியம் செய்த தாமரைச் செல்வி!
பல்வேறு காரணங்களுக்காக அபினய், அபிஷேக், அக்சரா, சின்னப்பொண்ணு, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, நீருப், பிரியங்கா, ராஜூ, சுருதி,வருண் ஆகியோர் இந்த வார நாமினேசன் லிஸ்டில் உள்ளனர்.
சாமி சத்தியமா அக்சராவின் அம்மாவிற்கு தன் கிட்னியைக்கொடுப்பேன் என்று பிக்பாஸ் வீட்டில் உறுதியளித்துள்ளார் நாடகக்கலைஞரும், போட்டியாளருமான தாமரைச்செல்வி.
பிக்பாஸ் சீசன் 5 அனைவரின் எதிர்ப்பார்ப்போடு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. 100 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல சண்டைகள், ஆட்டம், கொண்டாட்டம் என எதர்க்குமே பஞ்சம் இருக்காது. கடந்த 4 சீசன்களிலும் தெரிந்த முகங்களை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் இந்த முறை வித்தியாசமாகப் போட்டியாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளது. முந்தைய சீசன்களில் 16 போட்டியாளர்கள் மட்டுமே ஆரம்பத்தில் களம் கண்ட நிலையில் இம்முறை 18 போட்டியாளர்கள் விளையாடிவருகிறார். இதில் கானா பாடகி இசைவாணி, சின்னப்பொண்ணு, நாடகக்கலைஞர் தாமரைச்செல்வி, அபிசேக், மாடல்கள், தொகுப்பாளினி என பலர் உள்ளனர்.
முதல்நாளில் யார் யார்? நீங்கள் என்று அறிந்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. பின்னர் எப்போதும் போல கிளினிங், சமையல் டீம்கள் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை இதில் வெளிக்காட்டிவருகின்றனர். ஆனால் இதில் எப்படியாவது சண்டை வராமல் இருக்குமா? ஆம் ராஜூ- அபிசேக் மோதல், அதேப்போன்று திருநங்கை நமீதாவிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையே மோதல் நடைபெற்றது. ஆனால் அதன்பின்னர் சமாதானமாகிவிட்டது. இருந்தப்போதும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் திருநங்கை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் 8 வது நாளான நேற்று நாமினேசன் ப்ரோசஸ் நடைபெற்றது. பல்வேறு காரணங்களுக்காக அபினய், அபிஷேக், அக்சரா, சின்னப்பொண்ணு, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, நீருப், பிரியங்கா, ராஜூ, சுருதி,வருண் ஆகியோர் இந்த வார நாமினேசன் லிஸ்டில் உள்ளனர். மேலும் போட்டிகளில் அடிப்படையில் இந்த வார தலைவராக தாமரைச்செல்வி தேர்வாகியுள்ளார். முன்னதாக ”நான் தான் உனக்கு விட்டுக்கொடுத்தேன்” என்று சின்னப்பொண்ணு கூறவே, அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம் கா, நான் எதாவது தப்பு செய்திருந்தா? என்ன மன்னிச்சுருங்க.. நானும் நிறைய தெம்மாங்கு பாட்டுகள் மூலம் பிரபலமானவர் தான் என்று தாமரைச்செல்வி கூறினார்… அதற்கு சின்னப்பொண்ணு, அப்படியெல்லாம் பேசாதமா வெளியில பார்க்குறவங்க நம்ம போட்டி போடுகிறோம் னு நினைச்சுப்பாங்க…கூறினார். மேலும் நீதான் சொன்னயே நாடக்கலை பெரிசா, நாட்டுப்புறப்பாடல் பெரிசா பார்ப்போம்னு கூறிவிட்டு கொஞ்சம் அமைதியாகிவிட்டனர்.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் சாப்பிடும் இடத்தில் ஆரம்பித்துவிட்டது. தாமரைச்செல்வியிடம் வந்த பிரியங்கா, நீ நாட்டுப்புறக்கலைகளைவிட ஆங்கரிங்கும் கஷ்டம் என தெரிவித்தார். அந்நேரத்தில் கடந்த 2 நாள்களாக தன்னுடன் பேசாமல் இருந்த அக்சராவைப்பார்த்து, கண்ணு நீ பேசமாக இருந்ததே கஷ்டமா இருந்தது. கவலைப்படாத உடம்பு எதுவானாலும் வெளியில் வந்து சாமி சத்தியமாக என்னோட கிட்னியை உன்னோட அம்மாவுக்கு கொடுப்பேன் என்று கூறினார். இது தன்னுடைய குழந்தைகள் மீது ஆணை எதுவும் தெரிந்துவுள்ளார். யாரும் எதிர்ப்பார்த்திராத நேரத்தில் இவர் தாமரைச்செல்வி கூறியதைப் பிக்பாஸ் போட்டியாளர்கள் பாராட்டிவருகின்றனர். ஆனாலும் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.