Bigg Boss 5 Tamil: ஸ்பெஷல் குறும்படம், நச் அட்வைஸ், கலகல சிரிப்பு! இது ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் எபிசோட்
ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன், இப்போது தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
![Bigg Boss 5 Tamil: ஸ்பெஷல் குறும்படம், நச் அட்வைஸ், கலகல சிரிப்பு! இது ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் எபிசோட் Bigg Boss 5 Tamil: day 55 ramya krishnan hosts the show in the absence of kamal hassan Bigg Boss 5 Tamil: ஸ்பெஷல் குறும்படம், நச் அட்வைஸ், கலகல சிரிப்பு! இது ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் எபிசோட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/e87e7fb9a995be88f71a06327d48573e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 55: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியினவ இந்த வார இறுதி எபிசோடை அவர் ஆன்லைன் மூலம் தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் தமிழ் சீசனில் இந்த வார இறுதி எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இப்போது அது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த் ஃபார்மெட் தெரியும் என்பதால் ரம்யா கிருஷ்ணனே தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடை அவரே தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இன்றைய எபிசோடில், மருத்துவமனை டிவி வழியாக பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல், ஆன்லைன் வழியாக ரம்யா கிருஷ்ணனை அறிமுகப்படுத்திவிட்டு பேசினார். அதனை அடுத்து, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸூடன் உரையாடிய ரம்யா கிருஷ்ணன், பள்ளிக்கூட விளையாட்டில் இருந்து ஒரு குறும்படத்தை போட்டுக் காட்டினார். அதில், சிபி மற்றும் அக்ஷரா இடையேயான் பிரச்சனையை தீர்த்து வைத்த அவர், அடுத்து இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களிடம் பேசினார். இதில், முதலாவதாக ப்ரியங்காவை சேஃப் ஜோனிற்கு அனுப்பி வைத்தார். ஸ்பெஷல் குறும்படம், நச் அட்வைஸ், கலகல சிரிப்பு என சிறப்பாக முடிந்திருக்கிறது ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் எபிசோட்.
#BiggBossTamil இல் இன்று.. #Day55 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/51HvNDRlzU
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021
#BiggBossTamil இல் இன்று.. #Day55 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/F18FMYaMDo
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)