Bigg Boss 5 Tamil Promo: ‛போட்டி நடக்குதா... போட்டுக் குடுக்குறது நடக்குதா...’ அபிஷேக் அட்டகாசம் ஓவர்!
18வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்க வேண்டும் என்ற நோக்கில் அபிஷேக் மும்முரமாக இருக்கின்றார்
![Bigg Boss 5 Tamil Promo: ‛போட்டி நடக்குதா... போட்டுக் குடுக்குறது நடக்குதா...’ அபிஷேக் அட்டகாசம் ஓவர்! Bigg Boss 5 Tamil Day 18 Promo 2 abishek manipulates other housemates to make game interesting Bigg Boss 5 Tamil Promo: ‛போட்டி நடக்குதா... போட்டுக் குடுக்குறது நடக்குதா...’ அபிஷேக் அட்டகாசம் ஓவர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/21/4c7d3fe2de7ab554a30413ed60bbcab9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 18 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், 18வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்க வேண்டும் என்ற நோக்கில் அபிஷேக் மும்முரமாக இருக்கின்றார். இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோவில், பாவனியை பார்த்து, “டாப் அஞ்சுல நீ, நான் இருக்கனும். வருண இங்கவிடாத” என அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த க்ளிப்பிங்கிலேயே வருணிடம் சென்று, “உன்ன ஹால்ல விடமாங்க” என கொளுத்தி போடுகிறார்.
“நீ ஏன் அபிஷேக் இப்படியெல்லாம் செய்யுற” என ஸ்ருதி கேள்வி கேட்க, “எனக்கு வருண் வர கூடாதுனு” திட்டவட்டமாக சொல்கிறார் அபிஷேக். அதுமட்டுமில்லாமல், “போட்டியை சுவாரஸ்யமாக்க ஏதாச்சு பண்ணுங்களேன்” என ஸ்ருதி, இசைவாணியைப் பார்த்து கேட்கிறார் அபிஷேக்!
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
#Day18 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/1ZDKkprGau
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021
ப்ரொமோ: 1
#Day18 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/LgsJMlFegX
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)