Bigg Boss 5 Tamil Promo: ‛விஜய தசமி அன்னைக்கு கொளுத்தி போடுவாங்கனு நினைக்கலையே’ -ப்ரியங்கா!
இமான் அண்ணாச்சி பற்றி பாவனி, அக்ஷராவிடம் கொளுத்தி போடுகிறார் அபிஷேக். மொத்தத்தில் இன்றைய பிக் பாஸில், திருவிழாவிற்கு நடுவே புகைச்சல் இருக்கும் என்பது உறுதி!
Bigg Boss 5 Tamil Day 12 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரமான இந்த வாரம் நாமினேஷன், வாழ்க்கை கதை, க்ரூபிஸம் என வழக்கமான பிக் பாஸ் சீசனாக சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 12-வது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வந்த நிலையில், இன்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் விடுமுறை நாள் கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது.
”இந்த வீட்ல சிறப்பா பங்களிப்பு கொடுத்தவங்க யாரு, பங்களிப்பே இல்லாத நபர் யாரு என்பதை தரம் பிரிச்சு பார்க்கும் நேரம் வந்தாச்சு. பிக் பாஸால் ஒரு குழு அமைக்கப்பட்டு,அந்த குழு கருத்துக்கணிப்பு நடத்தி இன்னைக்கு சாயுங்காலம் நடைபெற இருக்கும் திருவிழாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது” என பிக் பாஸ் செய்தி அனுப்பி இருக்கிறார். அபிஷேக் இந்த விவரத்தை சக போட்டியாளர்களிடம் சொல்லி கொண்டிருக்க,
”விஜய தசமி அன்னைக்கு புதுசா கொளுத்தி போடுவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கலையேடா” என ப்ரியங்கா நக்கல் செய்வது அனைவரையும் சிரிக்க வைக்கின்றது.
கொண்டாட்டம், திருவிழா, டாஸ்க்குகளுக்கு மத்தியில், “அவரோட ஹூமர் லேண்ட்டே ஆகல், எனக்கு வொர்கவுட் ஆகல, கொளுத்தி போடுறாரு” என இமான் அண்ணாச்சி பற்றி பாவனி, அக்ஷராவிடம் கொளுத்தி போடுகிறார் அபிஷேக். மொத்தத்தில் இன்றைய பிக் பாஸில், திருவிழாவிற்கு நடுவே புகைச்சல் இருக்கும் என்பது உறுதி!
2021 IPL Finals: தோனி vs கொல்கத்தா படை: 2012, 2021 ஐபிஎல்.,ல் இப்படி ஒரு கனெக்ஷனா? கோப்பை யாருக்கு?
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day12 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/1sXvvd6OTN
— Vijay Television (@vijaytelevision) October 15, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்