2021 IPL Finals: தோனி vs கொல்கத்தா படை: 2012, 2021 ஐபிஎல்.,ல் இப்படி ஒரு கனெக்ஷனா? கோப்பை யாருக்கு?
2012 சம்பவங்கள் அப்படியே ரிப்பீட் ஆகியிருக்கும் நிலையில், இறுதிப்போட்டியை சென்னையே வெல்லும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
2021 ஐபிஎல் தொடரின் கடைசி நாள் இன்று. பரபரப்பான ப்ளே ஆஃப் சுற்றுக்கு பிறகு இரண்டு வலுவான அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோத உள்ளன. மூன்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியனான கொக்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் இறுதிப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இரு அணிகளைப் பொருத்தவரை, இந்த சீசனின் முதல் பாதி சென்னை அணிக்கும், இரண்டாம் பாதி கொல்கத்தா அணிக்கும் சாதகமாக அமைந்திருந்தது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டன. 2012க்குப் பிறகு இறுதிப்போட்டியில் மோத போகும் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே டஃப் ஃபைட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தோனியின் வியூகத்திற்கும், கொல்கத்தாவின் வலுவான வீரர்கள் படைக்கும் எதிராகவே இன்றைய போட்டி இருக்கும்!
நேருக்கு நேர்:
இது வரை 26 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 17 முறை சென்னையும், 9 முறை கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் 1 போட்டியில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில், சென்னை அணியே வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த சீசனில், இரு அணிகளும் போட்டியிட்ட 2 போட்டிகளில், இரண்டு முறையும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி வேட்டை தொடரும் பட்சத்தில் சென்னைக்கு இன்று கோப்பை தன்வசமாகும்.
சென்னை vs கொல்கத்தா போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து 6 முறை சென்னையும், 1 முறை கொல்கத்தாவும், சேஸிங் செய்து 11 முறை சென்னையும், 8 முறை கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளது.
2012 & 2021 - ஒரு சுவாரஸ்யம்:
CSK fans, you will love to see this 😅 🔄
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 14, 2021
(h/t @hemangkbadani) pic.twitter.com/6isFMoyH3O
2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில், லீக் சுற்று முடிவில் சென்னை நான்காவது இடத்திலும், கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் நிறைவு செய்தது. முதலில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில், டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு சென்றது. எலிமினேட்டர் போட்டியை வென்று குவாலிஃபையர் 2-ல் டெல்லியை சந்தித்த சென்னை, அந்த போட்டியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இறுதிப்போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து கொல்கத்தா, சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கிட்டத்தட்ட இதே போன்ற சம்வங்கள்தான் இந்த சீசனில் அரங்கேறியுள்ளது. ஆனால், சென்னையின் இடத்தில் கொல்கத்தா!
2021 ஐபிஎல் லீக் சுற்று முடிவில் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நான்காவது இடத்திலும் நிறைவு செய்தது. குவாலிஃபையர் 1 போட்டியில் டெல்லி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை. எலிமினேட்டரில் பெங்களூரை வென்று, குவாலிஃபையர் 2-ல் டெல்லியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா. இப்போது மீண்டும் ஒரு முறை சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
2012 சம்பவங்கள் அப்படியே ரிப்பீட் ஆகியிருக்கும் நிலையில், இறுதிப்போட்டியை சென்னையே வெல்லும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், ஏற்கனவே இந்த சீசனின் இரண்டாம் பாதியில் அதிரடியை காட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் கொல்கத்தா வரலாற்றை மாற்றி அமைக்க இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் களமிறங்க உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்