Actor Vijay Secret | பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய்ட்டு பேர கெடுத்துக்காம வெளிய வந்துட்ட..! சஞ்சீவிடம் விஜய் சொன்ன ரகசியம் தெரியுமா?
முதலில் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் விஜய்யிடம் போன் பண்ணி தெரிவித்தேன். அதற்கு அவன், நீ பிக்பாஸ் வீட்டுக்கு போறியா..? உள்ளே போய் என்ன செய்யப்போற..? என்று பயங்கரமாக கிண்டல் செய்தான்.
நடிகர் விஜய்யின் நண்பர் என்ற பெயரை கடந்து தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 5 வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகர் சஞ்சீவ். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த பல படங்களில் அவருக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன்பிறகு, திரைப்படங்களில் இருந்து ஒதுங்கிய சஞ்சீவ், சன் டிவியில் ஒளிப்பரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து, கலைஞர் டிவியில் மிகவும் பெரிதாக மக்களை கவர்ந்த 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி அசத்தினார். மேலும், கண்மணி, யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அதன் அனுபவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நடிகர் விஜய்யின் நண்பனாக மட்டும் பார்த்த என்னை பிக்பாஸ் சஞ்சீவாக பார்க்கிறார்கள். இன்றும், நான் வெளியில் செல்லும்போது. செல்வம் போறாரு என்று என்னை பார்த்து கைகாட்டிய தாய்மார்கள் தற்போது சஞ்சீவ் என்று அழைக்கிறார்கள். நான் எதை நினைத்து அந்த வீட்டிற்குள் சென்றேனோ அது நடந்து விட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள் போகும்போது இதை செய்ய வேண்டும், இதை செய்யகூடாது என்று பல்வேறு சிந்தனைகளுடன் உள்ளே நுழைந்தேன். வீட்டிற்குள் சென்ற 5 வது நிமிடத்தில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. நாம் என்ன திட்டம் தீட்டி விளையாட நினைத்தாலும் தூங்கி எழும்போது அனைத்தும் தொடங்கிய இடத்தில் முடிந்துவிடும். அந்த நேரத்தில் அங்கு என்ன நடக்கிறதோ, அதுதான் விதி. பிக்பாஸ் வீட்டை நான் வெளியேறியபோது எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது எனக்கு மகிழ்ச்சியே!
சஞ்சீவிடம் விஜய் சொன்ன ரகசியம் :
முதலில் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் விஜய்யிடம் போன் பண்ணி தெரிவித்தேன். அதற்கு அவன், நீ பிக்பாஸ் வீட்டுக்கு போறியா..? உள்ளே போய் என்ன செய்யப்போற..? அங்க எப்படி சமாளிக்கணும்ன்னு உனக்கு தெரியுமா என்று பயங்கரமாக கிண்டல் செய்தான். அதன்பிறகு வாழ்த்துகள் கூறி அனுப்பி வைத்தான். வீட்டைவிட்டு வெளியே வந்ததும் விஜய், பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய்ட்டு பெயரை கெடுக்கமால் வெளிய வந்துட்ட, எனக்கு உன்ன நினைத்து பெருமையாக உள்ளது. நானும் நீ உள்ள என்ன பண்றேன்ன்னு பார்க்குறதுக்கு ரெகுலரா பிக்பாஸ் பார்த்தேன்" என்று கூறியதாக சஞ்சீவ் தெரிவித்தார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்