![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 7 Tamil Teaser: பிக்பாஸ் ரசிகர்களே செம்ம ஹாப்பி நியூஸ்..வெளியானது சீசன் -7 டீசர்..
Bigg Boss 7 Tamil Teaser: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் -7 டீசர் வெளியாகியுள்ளது.
![Bigg Boss 7 Tamil Teaser: பிக்பாஸ் ரசிகர்களே செம்ம ஹாப்பி நியூஸ்..வெளியானது சீசன் -7 டீசர்.. Bigg Boss Tamil Season 7 Soon BB Tamil Season 7 Teaser Kamal Haasan - Watch Bigg Boss 7 Tamil Teaser: பிக்பாஸ் ரசிகர்களே செம்ம ஹாப்பி நியூஸ்..வெளியானது சீசன் -7 டீசர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/f503f465d7c7d607d5d01a27de7d468f1692366681756333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் -7 டீசர் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil.. Season 7.. விரைவில்.. 😎 | Teaser @ikamalhaasan @disneyplusHSTam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/PWskfGssX8
— Vijay Television (@vijaytelevision) August 18, 2023
விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு
சீரியல்களுக்கு அடுத்து இரவு நேரத்தில் குடும்பங்கள் சேர்ந்து கொண்டாட்டாமாய் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்து வைத்துள்ளது. கடந்த ஆறு சீசன்களாக நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சீசன் -7 தொடங்குவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று டீசர் வெளியாகியுள்ளது. மைல்ட் பிக்பாஸ் தீம் மியுசிக் உடன் சூரிய வெளிச்சத்தில் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள நடைப்பாதை பலகையில் வெள்ளை நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். ' I will be watching.’ என்ற பிக்பாஸ் சிக்னேச்சர் ஸ்டைலின் கமல்ஹாசன் பிக்பாஸ் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு அறிவிப்பது போல டீசர் அமைந்துள்ளது.
போட்டியாளர்கள் யார்?
பிக் பாஸ் 7- வது சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் முதல் ஆளாக தனியார் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. 'பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்..' என ஸ்டோரிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து பாப்புலர் ஆன ரஞ்சித் பிக்பாஸ் போட்டியாளராக வந்தால் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்று ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் சீரியல் நடிகர் அசீம், அரசியல் பிரமுகர் விக்ரமன், யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, நடிகை ரச்சிதா, வி.ஜே. மகேஷ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஜி. .பி முத்து ஏற்கனே பிரபலமாகவே இருந்தார். யூடியூபில் வெளியாகும் அவரின் அப்பாவித்தனமான பேச்சுக்கென்றே பல ஆண் ரசிகர்கள் இருந்தனர்.அவர் ஆபாசமாக பேசுவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினாலும் அவருக்கு கணிசமான ஆதரவும் இருந்தது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர், பல ரியாலிட்டி ஷோக்களில் கூட மிகவும் ஸ்போர்ட்டிவாக பங்கேற்றுள்ள நடிகர் பிருத்திவிராஜ் என்ற பப்லுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவர் பங்கேற்றால் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளித்திரையில் ஹீரோயின் தங்கையாகவும் நடித்து பிரபலமான நடிகை ஜாக்குலின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் ரசிகர்களிடையே குஷி அதிகமாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுகிறது. சமீப காலமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சை கருத்துகளால் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேகா நாயர், நடிகர் ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக இணையத்தில் மிகவும் பிரபலமான ஷர்மிளா இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் பிரபலமாகலாம் என பெரிய கனவுகளோடு தான் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே போட்டியின் இறுதிவரை மகிழ்ச்சியாக நன்றாக விளையாட முடிகிறது. இது வெறும் தகவல்களே தவிர பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகும் உறுதியான போட்டியாளர்களின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)