Bigg boss Raju Jeyamohan | பிக்பாஸ் ராஜூ பாய்க்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ
ராஜூவின் மனைவி தாரிகா அவருக்கு கொடுத்த முதல் பரிசு பற்றி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 78 வது நாளை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்த அபினய் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த பத்து போட்டியாளர்களில் அதிக கவனம் ஈர்த்து வருபவர் ராஜூ. மற்றப் போட்டியாளர்களை அவர் கையாளும் விதமும், அவர் அடிக்கும் கவுன்டர்களெல்லாம் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு ராஜூவும் அவரது மனைவியும் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் ராஜூவின் மனைவியான தாரிகா ராஜுவுக்கு தான் கொடுத்த பரிசு குறித்து பேசியுள்ளார்.
தாரிகா ராஜூவுக்கு முதலில் வாங்கிக்கொடுத்த பரிசு ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் basics of photography. ராஜூவுக்கு சினிமாவில் விருப்பம் இருப்பதை தெரிந்து கொண்ட அவரது மனைவி இந்தப் புத்தகத்தை வாங்கி அவருக்கு பரிசளித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் படித்த ராஜூ பின்னர் அந்த புத்தகத்தை அப்படியே வைத்திருக்கிறார். பின்னர் ஒரு முறை மயக்கம் என்ன படத்தை பார்த்த பின்னர் மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்து படித்திருக்கிறார்.
அப்படியே கேமராவில் இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்துள்ளார். ஆனால் அது சரியாக வரவில்லையாம். அதனைத் தொடர்ந்து தனக்கு கேமரா செட் ஆகாது என முடிவு கட்டிய ராஜூ அதை அப்படியே ஓரங்கட்டி விட்டாராம். அந்தப் புத்தகத்தையும் அவர் முழுமையாக படிக்கவில்லையாம்.
இதே போல, ராஜூவின் மனைவியிடம் கேட்டபோது, அவர் கிப்ட் ஏதும் கொடுக்கவில்லை, மாறாக ஒரு நாள் ஒரு தோட்டத்திற்கு கூட்டிப்போனார். அந்த நினைவு என்னால் மறக்க முடியாத நினைவாக இருந்ததாக கூறினார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்