மேலும் அறிய

Big Shorts: டர்மெரிக் மீடியா - மூவி பஃப் நிறுவனங்கள் நடத்தும் பிக் ஷார்ட் குறும்படப் போட்டி: பிரபல இயக்குநர்கள் நடுவர்கள்!

Big Shorts 3rd Season: இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.யு.அருண்குமார், ஹலீதா ஷமீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக 'Big Shorts குறும்படப் போட்டியின் 3ஆவது சீசனுக்காக, மூவி பஃபுடன் டர்மெரிக் மீடியா நிறுவனம் இணைந்துள்ளது. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், “படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்தப் போட்டி உதவியாக இருக்கும். 2017இல் நடந்த இந்தப் போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், இயக்குநர் ஹலீதா ஷமீம், எடிட்டர் செல்வா ஆர்.கே, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எடிட்டர் பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (சிறப்பு விருந்தினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றி பெறும் முதல் 3 போட்டியாளர்கள் டர்மெரிக் மீடியா மற்றும் மூவி பஃப்பிலிருந்து ரொக்கப் பரிசுகளை வெல்வார்கள் முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 3 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். வெற்றியாளருக்கு அவர்களின் ஸ்கிரிப்டை டர்மெரிக் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒரு விநியோக நிறுவனத்திடம் கூறுவதற்கான வாய்ப்பு & அவர்களுடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்”’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

க்யூப் சினிமா டெக்னாலஜிஸின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி கூறுகையில், 'கியூப், ஒவ்வொரு திரைப் படைப்புக்கும் மேலும் உயிரூட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் மூவி பஃப்பின் Big Shorts அதே நோக்கத்தில் நாம் மேலும் ஒரு படி மேலேறுவதற்கான வழியாக உள்ளது. தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்ஷன், விநியோகம் உட்பட சினிமாவின் அனைத்து அம்சங்களுக்கும் தொழில்நுட்பத்தை வழங்கும் இடத்தில் Qube செயல்படுகிறது. Big Shorts என்பது அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு சினிமாவின் அரங்கைத் திறந்துவிடவும், சினிமா சூழலைச் செழிப்பாக வைத்திருக்கவும் ஒரு படியாக இருக்கும். சினிமா துறையில் இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் டர்மெரிக் மீடியாவின் ஆர்வத்தைப் பார்த்து நாங்கள் வியக்கிறோம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்று கூறினார்.

டர்மெரிக் மீடியாவைச் சேர்ந்த மகேந்திரன், "Big Shorts குறும்படப் போட்டியின் 3-வது சீசனை" மூவி பஃப் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படத்துறையில் திறமையானவர்களைக் கண்டறியும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்துவருகிறோம். அப்படி ஏற்கெனவே பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதே பணியை இந்த ஆண்டும் சிறப்பாகச் செய்துமுடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். Big Shorts போட்டியின் மூலம், திறமையான இளம் படைப்பாளிகளிடம் இருந்து மிகச் சிறந்த 3 நிமிடக் குறும்படங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

Big Shorts வழக்கமான பார்வையாளர்களைக் கவர்வதையும் தாண்டி, புதிய வயது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை வழங்க விரும்புகிறது. இந்த அற்புதமான இணைப்பின் மூலம் டர்மெரிக் மீடியா மற்றும் மூவிபஃப் நிறுவனங்கள் கதை சொல்லலின் எல்லைகளைத் தாண்டி, குறும்பட வடிவத்தில் திரைப்படப் படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான தளத்தை வழங்கவுள்ளது” எனக் கூறியுள்ளார்.

போட்டி விவரங்கள்:

போட்டி மே 22, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் bigshorts.moviebuff.comஇல் பதிவு செய்யலாம். ஜூலை 1, 2024க்குள் தங்கள் Entry-களை சமர்ப்பிக்கவும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அடங்கிய புகழ்பெற்ற வல்லுநர்கள் குழு திரைப்படங்களைத் தேர்வுசெய்யும். அவை பொது வாக்களிப்பிற்காக ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஆன்லைன் வாக்களிப்பின் அடிப்படையில், முதல் ஐந்து படங்கள் ஐந்து வாரங்களுக்குப் பெரிய திரையில் திரையிடப்படும். கியூப் சினிமா நெட்வொர்க்கின் பல திரையரங்கு விநியோக மாவட்டங்களில் 500 திரைகளில் இந்தப் படங்கள் வெளியிடப்படும். அந்த நேரத்தில் Bigshorts இல் இந்த முதல் ஐந்து படங்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலம் தரவரிசைப்படுத்தப்படும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் படம் வெற்றிப்படமாக அறிவிக்கப்படும். 2024ஆண்டின் மத்தியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Embed widget