Big Boss 7 Tamil: மாயாவால் பாதுகாப்பு இல்லை.. புலம்பும் அர்ச்சனா.. விசித்ராவை பார்த்து 'ச்சீ' எனத் திட்டிய ஜோவிகா!
ஜோவிகா மீண்டும் ஒரே கண்டெட்டை தருவதாகக் கூறி விசித்ரா கிண்டலடித்தார். அதனால், எரிச்சலான ஜோவிகா வெறுப்புடன் ச்ச்சீ...என விசித்ராவை திட்டுகிறார்.
Big Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் விசித்ரா - ஜோவிகாவுக்கு இடையே வாக்குவாதம் முற்ற மற்றொரு பக்கம், மாயாவால் நான் பாதுகாப்பாக உணரவில்லை என்று அர்ச்சனா கூறுகிறார்.
பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீசனில் சிறிய ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது.
பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே அடிப்படை கல்வி குறித்து ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையானது. இந்தச் சூழலில் கடந்த வார எவிக்ஷனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத குற்றச்சாட்டால் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிரதீப்புக்கு மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா உள்ளிட்ட போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர். இதனால், பூர்ணிமா, மாயா, ஜோவிகா மீது கோபப்பட்ட விசித்ரா, பிளான் செய்து பிரதீப்பை வெளியேற்றியதாகவும், பிரதீப் செய்த தவறை தன்னிடம் ஏன் கூறவில்லை என்றும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே ஜோவிகா மீண்டும் ஒரே கண்டெட்டை செய்வதாகக் கூறி விசித்ரா கிண்டலடித்தார். அதனால், எரிச்சலான ஜோவிகா வெறுப்புடன் ச்ச்சீ...என விசித்ராவை திட்டுகிறார்.
#Vichithra trolls #Jovika orae content thirumba thirumba kodukatha na bore #Vichithra today 😂🔥#BiggBossTamil #BiggBossTamil7pic.twitter.com/a2Vn9FTL6u
— Sekar 𝕏 (@itzSekar) November 6, 2023
இப்படி ஜோவிகாவும் விசித்ராவும் சண்டை போட்டுக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் மாயாவால் தனதுக்கு பாதுகாப்பு இல்லை என வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அர்ச்சனா கூறியுள்ளார். ஐஷூகிட்ட தனியாக பேச வேண்டும் என அர்ச்சனா கூப்பிட, அப்போது அங்கு வந்த மாயா, ஐஷூகிட்டையும், அர்ச்சனாவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ”மாயாவுடன் பாதுகாப்பாக இருப்பதாக நான் உணரவில்லை” என்று அர்ச்சனா கூறுகிறார். அதேநேரம், அர்ச்சனாவிடம் நீ பாதுகாப்பாக இருக்கிறாயா என ஐஷூவை பார்த்து மாயா கேட்கிறார். இப்படியாக பிக்பாஸ் வீட்டில் இரு பிரிவாக பெண்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
#Archana told, iam not safe with #Maya 🤣
— Ahamed Inshaf (@InshafInzz) November 6, 2023
Bully gang #Maya #Poornima ganged up & attack #VJArchana.#Vickram & #Mani enna ya panriga neenga. Jing Jang🤣#Nixen 👎🏻#Jovika bossy 😁#BiggBossTamilSeason7 #BiggBossTamil7 #BiggBossTamil#Pradeeppic.twitter.com/1ejOx9jSBe
Dinesh slaps both poornima and maya 🔥🔥🔥… Asks maya and poornima about showing their *BRA* to NIXEN ..questions their feminism ?? serupadi to jovika and aishu as well .. #biggbosstamil #BiggbossTamil7 #maya #PradeepAntony #pradeep #PradeepArmy #maya #kamalhasan #poornima pic.twitter.com/KhLkb5EMs8
— Sakthi Bhuvanesh (@SBhuvanesh418) November 6, 2023