மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ஜனனி, மைனா நந்தினி, குயின்சி.. மூவரில் இந்த வாரம் பெட்டியைக் கட்டி வெளியேறியது யார்?

சாவி பொருந்தி திறக்கும் சூட்கேஸ் கொண்ட நபர் வெளியேறுவார் என்றும் கமல்ஹாசன் தெரிவிக்கும் இன்றைய ப்ரொமோ சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்‌ஷனில் கதிரவன், ஜனனி, ரச்சிதா, மைனா நந்தினி, தனலெட்சுமி, குயின்ஸி உள்ளிட்ட ஆறு பேர் இடம் பிடித்தனர்.

எவிக்‌ஷனுக்கு வந்த அனைவருமே சேஃபாக விளையாடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் எந்தப் போட்டியாளர் வெளியேறுவார் என்ற குழப்பம் வாரத்தின் தொடக்கம் முதலே நிலவி வந்தது.

மேலும், இந்த வாரம் “பழங்குடியின மக்களும், ஏலியன்ஸூம்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட சூழலில் ஆட்டமும் சூடுபிடித்தது.

கடந்த வார வார இறுதியில் பேசிய கமல், “அனைவரும் சேஃபாக விளையாடினால், இருப்பதிலே போரிங் ஆன சீசன் என்ற பெயரை வாங்கிவிடுவீர்கள்” என எச்சரிக்கை கொடுத்த பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் இரக்கம் காட்டாமல் எகிறி அடிக்கத் தொடங்கினர்.

பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டைகள் உச்சகட்டத்தை எட்டி பிக் பாஸ் வீடு போர்க்களமாக மாறியது.

இவற்றின் மத்தியில் வாரவாரம் நடத்தப்படும் அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் இந்த வாரம் குயின்ஸி கடைசி இடம் பிடித்த நிலையில், அவரே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்றைய எபிசோடில் நாமினேட் ஆனவர்களில் கதிரவன், தனலட்சுமி, ரச்சிதா சேவ் ஆன நிலையில், ஜனனி, குயின்ஸி, மைனா நந்தினி மூவரும் குறைந்த ஓட்டுகள் பெற்று தொடர்ந்து எவிக்‌ஷன் லிஸ்டில் உள்ளனர்.

சென்ற வாரம் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடையே கேள்வி - பதில் நேரம் நடைபெற்றபோது, ’பிடிக்கலனா எவிக்‌ஷன்ல வெளிய கூட்டிட்டு வந்துடுங்க’ என மைனா நந்தினி பேசியது ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அதேபோல் அமுதவாணனை சார்ந்தே போட்டியிடும் ஜனனியின் கேம் குறித்தும் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

இதனிடையே இன்றைய பிக் பாஸ் ப்ரொமோவில் இந்த 3 பேருக்கும் சூட்கேஸ்களையும் அவற்றுக்கான சாவியையும் கொடுத்து கமல்ஹாசன் டாஸ்க் கொடுக்கிறார். மேலும் சாவி பொருந்தி திறக்கும் சூட்கேஸ் கொண்ட நபர் வெளியேறுவார் என்றும் கமல்ஹாசன் தெரிவிக்கும் வகையில் ப்ரொமோ சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இந்நிலையில், முன்னதாக பிக் பாஸ் வீட்டை விட்டு குயின்ஸி வெளியேறியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget