Bhagyalakshmi Serial: அதிரடிதான் இனிமே.. ஸ்வீட் கொடுத்து பாக்யா வீட்டில் பிரச்சனையை கிளப்பிய கோபி...இன்றைய எபிசோட் இதோ...!
Bhagyalakshmi Serial Written Update Today (12.11.2022): ஜெனிக்கு செழியன் பழங்களை கொடுக்கிறார். அப்போது ஜெனி அவரிடம் பழமெல்லாம் நீ வாங்குனதா என கேட்க, அப்பா வாங்கி கொடுத்தாரு என உண்மையை சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியால் பாக்யா வீட்டில் உள்ள உறுப்பினர்கள் கோபமடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
எழிலுக்கு நேர்ந்த சோகம்
ஸ்கூலில் சக மாணவி போன் கொண்டு வந்த சம்பவத்தில் மாட்டிக்கொண்ட இனியாவிடம், வீட்டில் இருந்து ஆட்களை கூட்டி வர பள்ளி நிர்வாகம் சொல்கிறது. அதனை வீட்டிற்கு வரும் அவள் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். தொடர்ந்து அம்ரிதா வீட்டுக்கு செல்லும் எழில் சகஜமாக பேச முயல அவரோ பயப்படுகிறார். அந்நேரம் பார்க்க அம்ரிதா பெற்றோர் வர அவர்கள் எழிலிடம் அம்ரிதா கல்யாணம் குறித்து வீட்டில் பேசுனீங்களா என கேட்கிறார்கள். ஆனால் அம்மாவுக்கு எல்லாம் தெரியும். வீட்டில் இப்ப இருக்க சூழலுக்கு என்னால எல்லோர்டையும் சொல்ல முடியல.
அதனால தான் நான் கொஞ்சம் டைம் கேட்டேன் என சொல்கிறார். அப்போது அம்ரிதா அம்மா வர்ஷினி பற்றி சொல்ல வர, அப்பா பேச விடாம தடுக்கிறார். மேலும் இந்த விஷயத்துல ஒரு முடிவு தெரியாத வரைக்கும் வீட்டுக்கு வர வேணாம்ன்னு தெரிவிக்க எழில் அதிர்ச்சியடைந்து கண் கலங்குகிறார். இதனையடுத்து அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டு இதுக்கு ஒரு முடிவோட வர்றேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.
கோபியால் வெடித்த பிரச்சனை
ஜெனிக்கு செழியன் பழங்களை கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி அவரிடம் இந்த பழமெல்லாம் நீ வாங்குனதா என கேட்க, அப்பா தான் வாங்கி கொடுத்தாரு என உண்மையை சொல்கிறார். இதனால் டென்ஷனாகும் ஜெனியிடம் என்ன நடந்தது என ஈஸ்வரி கேட்க, கோபி பழம் வாங்கி கொடுத்ததை செழியன் சொல்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் ஈஸ்வரி அவன் கொடுத்தான் வாங்கியிருவியா. இவளுக்கு நம்மாளால வாங்கி கொடுக்க முடியாதா என கொந்தளிக்கிறார். நான் சொல்ல சொல்ல ஸ்வீட், பழமெல்லாம் ஜெனிக்கு கொடுக்க சொல்லி அட்வைஸ்லாம் பண்ணாரு என செழியன் தெரிவிக்கிறார். பின்னர் அந்த பழங்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் ஈஸ்வரி கொட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.
செழியனிடம் பாக்யா உங்கப்பா எனக்கு பண்ணதெல்லாம் நீ நினைக்க வேண்டாம். ஆனால் இந்த குடும்பத்துக்கு பண்ணத கொஞ்சம் நினைச்சிப்பாரு என சொல்கிறார்.
இனியா எடுத்த முடிவு
ஸ்கூலுக்கு வீட்டில் இருந்து யாரையாது அழைச்சிட்டு போகணுமே என நினைக்கும் இனியா எழில், ஈஸ்வரி, பாக்யா ஆகியோரிடம் ஏதேதோ சொல்லி அழைக்கிறாள். ஆனால் என்ன காரணம் என கேட்க நீங்க வர வேண்டாம் என சொல்லிவிட்டு கடைசியாக ராமமூர்த்தி சம்மதத்தை பெறுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.