மலையாள சூப்பர்ஹிட் 'பெங்களூரு டேஸ்’ படத்தின் இந்தி ரீமேக்... முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா வாரியர்!
அஞ்சலி மேனன் இயக்கிய மலையாள சூப்பர் ஹிட் படமான ‘பெங்களூர் டேஸ்’ இந்தியில் ரீமேக் ஆகிறது என படத்தின் குழு அறிவித்துள்ளது.
![மலையாள சூப்பர்ஹிட் 'பெங்களூரு டேஸ்’ படத்தின் இந்தி ரீமேக்... முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா வாரியர்! Bangalore Days Hindi Remake Yaariyan 2 Anaswara Rajan Priya Varrier to play lead roles மலையாள சூப்பர்ஹிட் 'பெங்களூரு டேஸ்’ படத்தின் இந்தி ரீமேக்... முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா வாரியர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/16/68b20d5c0f2f5d527ee164a4e1a2c9371665922822917501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அஞ்சலி மேனன் இயக்கிய மலையாள சூப்பர் ஹிட் படமான ‘பெங்களூர் டேஸ்’ இந்தியில் ரீமேக் ஆகிறது. 2014ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த இத்திரைப்படத்தில் துல்கர், ஃபஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நாஜிம், நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இப்படம் விரைவில் இந்தியில் வெளியாகும் எனத் தெரிகிறது.
‘யாரியன் 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரிலி இயக்கவுள்ளனர்.
Finding friendship in family and family in friends! Coming back to you, is the beautiful story of #Yaariyan2
— Yash Daasguptaa (@Yash_Dasgupta) October 12, 2022
In cinemas 12th May 2023@TSeries #BhushanKumar #DivyaKhoslaKumar @SapruAndRao #VinaySapru #RadhikaRao @MeezaanJ @AnaswaraRajan_ @pearlvpuri @Warina_Hussain pic.twitter.com/AsmrIK9HKV
திவ்யா கோஸ்லா குமார், மீசான் ஜாஃப்ரி, யாஷ் தாஸ் குப்தா மற்றும் பேர்ல் வி பூரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாலிவுட் நட்சத்திரங்கள் அனஸ்வர ராஜன் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் காணப்படுகின்றனர்.
மூன்று உறவினர்களின் நட்பை அடிப்படையாக வைத்து, அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் துனைநின்று எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
'பேபனா பியார்' மற்றும் 'நாகின்' போன்ற டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் பேர்ல் வி பூரி, 'யாரியன் 2' மூலம் பெரியதிரைகளில் அறிமுகமாகிறார். இருவரும் இதற்கு முன்பு 2020 இல் வெளியான 'தெரி ஆன்கோன் மே' பாடலில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
View this post on Instagram
'யாரியன் 2' படத்திற்குத் திரும்பிய ராதிகா ராவ் மற்றும் 'சனம் தெறி கசம்' புகழ் வினய் சப்ரு ஆகியோர் இரண்டாம் பாகத்தை இயக்க வந்துள்ளனர். திவ்யா இயக்கத்தில் ஹிமான்ஷ் கோஹ்லி, ரகுல் ப்ரீத் சிங், நிக்கோல் ஃபரியா ஆகியோர் நடிப்பில் 'யாரியன்' (முதல் பாகம்) வெளியானது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)