Balaji Murugadoss : மலையாள ரீமேக்கில் பாலாஜி முருகதாஸ்... ரவீந்தர் தயாரிப்பதாக தகவல்!
பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் லிப்ரா நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் திரைப்படத்திற்கு "மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்" என டைட்டில் வைத்துள்ளனர்.
சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பலரும் சின்னத்திரையிலும் வெற்றித்திரையிலும் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளனர். சாண்டி மாஸ்டர், முகேன், தர்ஷன், கவின், லொஸ்லியா உள்ளிட்ட பலரும் ஹீரோவாக நடித்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தற்போது திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் வின்னர் :
பிக் பாஸ் 4 சீனில் பங்கேற்று ரன்னர் அப்பாக வெற்றி பெற்றவர் பாலாஜி முருகதாஸ். அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசும் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் இருந்து திரும்பிய உடன் பாலாஜிக்கு திரைப்படம் வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
BB ultimate winner aha “porupu” etra tharunam 💯
— Balaji Murugadoss (@OfficialBalaji) April 11, 2022
“Kaiyil kedachathu tholanjaa⁰Innum romba pudichathu kedaikkum “❤️
Playing and winning against 15 experienced players Was a Privilege.
And it is only for my fam ❤️
edho enala mudinja repay for all your love #BalajiMurugadoss pic.twitter.com/852YBcwtGP
ஹீரோவாக அறிமுகம் :
பாலாஜி முருகதாஸ் லிப்ரா நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளர் என்ற அறிவிப்பு ஒரு வருடத்திற்கு முன்னரே வெளியானது. தற்போது இப்படத்திற்கு "மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்" என டைட்டில் வைத்துள்ளனர். இந்த அறிவிப்பினை பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்து என்னை அப்படத்தின் ஒரு அங்கமாக தேர்ந்தெடுத்ததற்கு லிப்ரா நிறுவனத்திற்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
By seeing the title, it looks like a remake of Malayalam film #Choclate (2007) pic.twitter.com/g9TY8rUl65
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 3, 2022
மலையாள ரீ மேக் திரைப்படமாக இருக்குமோ?
இயக்குனர் ஷாஃபி இயக்கத்தில் 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "சாக்லேட்" திரைப்படம் காமெடி கலந்த ரோமைட்டிக் திரைப்படம். இப்படத்தில் பிரிதிவிராஜ், ஜெயசூர்யா, ரோமா அஸ்ராணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரே ஆண் வேலைக்கு சேர்கிறார். அதற்கு பிறகு நடைபெறும் கதை, காதல் தான் படத்தின் கதைக்களம்.
பாலாஜி முருகதாஸ் நடித்துவரும் இப்படத்தின் டைட்டிலான "மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்" என்பதை பார்க்கும் போது இது மலையாள படமான "சாக்லேட்" படத்தின் ரீமேக் திரைப்படமாக இருக்கும் என நெட்டிசன்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தின் கதை குறித்த தகவலோ அல்லது மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் எதுவம் இதுவரையில் வெளியாகவில்லை.