Ayali Director: பெண்கள் சட்டையில் பாக்கெட் இல்லாதது ஏன்? அயலி இயக்குனர் தந்த அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு பீரியட்ஸ் என்பது ஒரு இயல்பான விஷயம் என்றாலும் அதை வெளிப்படையாக சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் 'அயலி'. பொதுவாக வெப் சீரிஸ் என்றால் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதைகளாக தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி சமூக அக்கறை கொண்ட ஒரு தொடராக மிகவும் துணிச்சலாக பெண்ணியம் பேசி 8 எபிசோடுகளாக வெளியாகியுள்ள வெப் சீரிஸ் அயலி.
அயலி வெப் தொடரில் ஒரு பெண் வயதுக்கு வரும் வெயிட்டான காட்சியை மிகவும் இயல்பாக காட்சிப்படுத்தியிருந்தார். பெண்களுக்கு பீரியட்ஸ் என்பது ஒரு இயல்பான விஷயம் என்றாலும் அதை வெளிப்படையாக சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். இது குறித்து இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில் "சோசியல் மீடியாவில் இன்று இது அனைத்தை பற்றியும் பேச துவங்கிவிட்டார்கள். அதன் தேவை, பயன்பாடு அதன் நெகடிவ் இம்பாக்ட் என்பதை குறித்தும் விரிவாக பேச துவங்கிவிட்டார்கள். இன்னும் சொல்ல போனால் பெண்களின் உடையில் இருக்கும் பொலிட்டிகள் விஷயங்கள் பற்றி கூட நாம் பெரிதும் யோசிப்பதில்லை.
பெண்கள் உடையில் மார்க்கெட்டிங் :
பெண்கள் உடையில் பாக்கெட் இருப்பதில்லை. ஆண்கள் ஷர்ட் பேண்டில் பாக்கெட் வைத்து தானே இருக்கு. அப்படி இருக்கையில் பெண்கள் உடைகளில் மட்டும் பாக்கெட் இல்லாததற்கு என்ன காரணம். அது ஸ்டைல் என நாம் சொல்லிவிடலாம் ஆனால் அது எதனால் என்பதை பற்றி யாராவது கேட்கும் போது தான் நாம் யோசிக்கவே செய்வோம். பெண்களுக்கும் பாக்கெட்டுகளுக்கான தேவை இருக்கும். அது இல்லாததால் தான் ஹேண்ட் பேக் வைத்து கொள்கிறார்கள். ஹேண்ட் பேக் வாங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அதில் திணிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்களே" என்றார்.
புராடெக்ட்டாக மாறும் உடலமைப்பு :
மேலும் அவர் பேசுகையில் "சுவிட்சர்லாந்திலிருந்து எனக்கு ஒரு பெண்மணி போன் மூலம் தொடர்பு கொண்டார். அவருடைய மகள் ஜீன்ஸ் பேண்ட் எடுக்க வேண்டும் என்றால் ஆண்களின் செக்ஷனில் இருந்து தான் எடுப்பாராம். அதே சைஸ் தான் என்றாலும் விலை கம்மியாக இருக்கும் அதற்கும் மேல் மிகவும் கம்ஃபர்ட்டாக இழுத்து பிடிக்காமல் ஈஸியாக இருக்கும். டி-ஷர்ட்டும் அதே போல தான். உடலமைப்பை வெளியே காட்ட வேண்டும் என்பது போல இல்லாமல் பிரீயாக இருக்கும். இது அனைத்திலும் மார்க்கெட்டிங் விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு உடலையே பொருளாக மாற்றுகிறார்கள்.
பெண்களின் மனநிலை :
அயலி திரைப்படத்தில் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் என்றால் இது போல சில பிரச்சனைகள் உள்ளன. அதனால் அந்த தருணத்தில் இருந்து நடைபெறும் அனைத்தையம் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். பெரியவளாக ஒரு பெண் ஆகும் போது எந்த அளவிற்கு சந்தோஷமான மனநிலையில் இருக்கிறாளோ அதே அளவிற்கு அவள் சந்திக்கும் அசௌகரியத்தை பற்றியும் காண்பிக்க விரும்பினேன். அதற்கு பிறகு பெண்கள் உடையில் கூட மாற்றங்கள் ஏற்படும். அது உண்மையிலேயே பெண் குழந்தைகளுக்கு தொந்தரவு என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாது. அதை எடுத்து சொல்வதற்காகவே இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டன என்றார் அயலி படத்தின் இயக்குனர் முத்துக்குமார்.
இந்த காட்சிகள் இணையத்தில் ஒரு விவாத பொருளாக மாறியிருந்தாலும் சமூகத்தின் சிந்தனைகளில் நிச்சயம் அது பதிந்து இருக்கும்.