மேலும் அறிய

Jawan Movie: பாலிவுட்டில் கால்பதிக்கும் அனிருத்.. அட்லீக்கு ட்விட்டரில் நன்றி.. வெளியானது ஜவான் டீசர்..!

நடிகர் ஷாருக்கானுக்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். 

நடிகர் ஷாருக்கானுக்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இந்தப்படம் அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிருத், “கனவு நனவாகிவிட்டது. பாலிவுட்டின் பாட்ஷாவுக்கு இசையமைக்கிறேன். சகோதரர் அட்லிக்கு எனது நன்றி. உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. நிச்சயம் இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. எங்களை ஆசிர்வதியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.       

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது. படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில், “ஜவான்” திரைப்படம் மொழி, நிலப்பரப்பு தாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குவதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்‌சன் படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது! எங்கள் திரைப்படத்தின் ஒரு முன்னோட்டமாக இந்த டீசர் இருக்கும். இந்த டீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு அளிக்கும்.” என்றார்.

ஜவான் படத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில், “ஜவான்” உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித்துள்ளேன்” என்றார். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். “ஜவான்” திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாக வெளியிடப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
Embed widget