மேலும் அறிய

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் டோவினோ தாமஸின் ARM படம்.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

டோவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ARM படம், 4 நாட்களில் உலகளவில் 35 கோடி வசூலைக் கடந்துள்ளது.

மின்னல் முரளி புகழ் டோவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ARM படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 4 நாட்களில் 35 கோடி வசூல் செய்துள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ARM:

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த டோவினோ தாமஸ், அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது.

இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் டோவினோ தாமஸ் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது. ARM படத்தில் டோவினோ தாமஸ் குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளுடன் சித்தரிக்கப்படுகிறது, மேலும் அவரது அழுத்தமான திரை ஈர்ப்பு மற்றும் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது, குறிப்பாக அவரது உணர்ச்சிகரமான நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மெகா வேட்டை:

ARM படம் பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களில் உலகளவில் 35 கோடி வசூலைக் கடந்துள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 151.87K டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ள இப்படம், அதன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் சாதனைகளை முறியடித்து வருகிறது.

4வது நாளில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகியுள்ளன. டோவினோ தாமஸின் அதிரடி மற்றும் ஃபேன்டஸி த்ரில்லரைக் காண பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மிகச்சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ARM படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்க, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். 

மைத்ரி மூவி விநியோகஸ்தர்கள் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார்கள். "கான்", "சித்தா" போன்ற படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற திபு நைனன் தாமஸ் "ARM" படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் மூலம் கவனம் பெற்ற கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, கபீர் சிங், பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget