அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. பிரபலங்கள் தங்களது திருமணத்தை வெள்நாடுகளில் ஆடம்பரமாக திட்டமிடுவது வழக்கம்தான். ஆனால் அனிருத் காவ்யா மாறன் திருமணத்திற்கு ஏன் கிரீஸ் நாட்டை தேர்வு செய்தனர். அந்த நட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்.
கிரீஸ் பல அழகான தீவுகளைக் கொண்ட நாடு. நீல நிறக் கடல், வெள்ளை நிறக் கட்டிடங்கள், கடற்கரையோர நகரங்கள் என இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. கடலை ஒட்டிய அழகான இடத்தில் திருமணத்தை நடத்த விரும்புபவர்களுக்கு கிரீஸ் ஒரு சிறப்பான தேர்வாக இருக்கிறது.
கிரீஸ் நாட்டின் சிறப்புகள்
ஐரோப்பாவில் அமைந்துள்ள கிரீஸ் நாடு, அதன் பழமையான வரலாறு, தீவுகள், கடற்கரைகள் மற்றும் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்றது. ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபொலிஸ், பார்த்தீனான் கோயில் போன்றவை அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.
கிரீஸ் நாட்டில் உள்ள சான்டோரினி, மைக்கோனோஸ், க்ரீட் போன்ற தீவுகள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. நீல நிறக் கடல், வெள்ளை நிறக் கட்டிடங்கள், கடலை ஒட்டிய கிராமங்கள், மலைப்பாங்கான நிலப்பரப்புகள் ஆகியவை இந்தத் தீவுகளின் முக்கியச் சிறப்புகளாக உள்ளன.
குறிப்பாக, சான்டோரினி தீவு அதன் சூரிய அஸ்தமனக் காட்சிகளுக்கும் கடலை நோக்கிய கட்டிடங்களுக்கும் புகழ்பெற்றது. மைக்கோனோஸ் தீவு கடற்கரைகளுக்கும் பழமையான தெருக்களுக்கும் பெயர் பெற்றது. க்ரீட் தீவு அதன் வரலாற்றுச் சின்னங்கள், இயற்கை அழகு மற்றும் உணவுப் பாரம்பரியத்துக்காக அறியப்படுகிறது.
வரலாறும் இயற்கை அழகும்
கிரீஸ் நாட்டின் சிறப்பு அதன் சுற்றுலாத் தலங்களில் மட்டும் இல்லை. பண்டைய கிரேக்க நாகரிகம், தத்துவம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றிலும் இந்த நாடு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆலிவ் எண்ணெய், ஆலிவ் பழங்கள், சீஸ் மற்றும் கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவுக் கலாசாரமும் கிரீஸின் தனித்துவங்களில் ஒன்றாகும்.
இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்பு, கடற்கரைகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட கிரீஸ், திருமணம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான இடமாகவும் கவனம் பெறுகிறது. அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு இந்த நாடு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், கிரீஸ் நாட்டின் சிறப்புகள் குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















