கணவன் மனைவியான அனிருத் காவ்யா மாறன்..கிரீஸில் கோலாகலமாக நடந்த திருமணம்
Anirudh Kavya Maran Marriage : இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் இன்று கிரீஸில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் இன்று கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள நேற்று ரஜினிகாந்த் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இன்று கிரீஸ் நாட்டில் அனிருத் காவ்யா மாறன் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனுஷ், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மறுபுறம், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் செயல் இயக்குநராகவும், ஐபிஎல் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இருவருக்கும் இன்று (நவம்பர் 10) கிரீஸில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் இருவருக்கும் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரையுலகம், அரசியல், விளையாட்டு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























