மேலும் அறிய

Amitabh bachchan: கொரோனாவால் மனமுடைந்த அமிதாப் பச்சன்...ரசிகர்களுக்கு எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வெற்றி பெற்றுவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் எப்பொழுதுமே தன்னுடைய வாழ்க்கையை குறித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார். நேற்று அவருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்கள் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


Amitabh bachchan: கொரோனாவால் மனமுடைந்த அமிதாப் பச்சன்...ரசிகர்களுக்கு எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

எந்த அப்டேட்டும் தரப்போவதில்லை!

தற்போது தொற்று காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு குணமாகி வருகிறார். அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் (blog) தனது எண்ணங்களையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் பதிவிட்டு வருவது அவரது வழக்கம். நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனது டம்ஃப்ளர் பக்கத்தில் புதிய குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மிகவும் வருத்தம் எனக் குறிப்பிட்ட அவர், தனது உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் தரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வெற்றி பெற்றுவிட்டது!

அவர் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் எழுதி இருப்பதாவது, ஆம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஒன்று,இரண்டு, பூஸ்டர் என அனைத்தையும் எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வெற்றி பெற்றுவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும் தனது உடல்நிலை குறித்து தெரிவிப்பது அர்த்தமில்லை எனவும்,  அவருடைய வேலைகளில் இருந்து அவரது உடல்நிலை அவரை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மருத்துவத்துறை மற்றும் மருத்துவர்களின் தொழில் மிகவும் தூய்மையான மற்றும் போற்றப்பட வேண்டியது. அவர்களின் சிந்தனை அல்லது அவர்களது எண்ணத்தில் நுழைய முயற்சிப்பது ஒரு தவறான செயலாகும். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, இத்தனை வருடங்களில் அவர்கள் கற்றுக் கொண்டவற்றையும்,  நடைமுறைப்படுத்தி வந்த அனைத்தையும்  நடைமுறைபடுத்த அவர்களுக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும். 

நம் வாழ்விலும் வேலை நேரங்களிலும் பல மில்லியன் முறை தனிமையை தேடி இருப்போம். ஆனால் நிஜத்தில் நாம் தனிமைப்படுத்தப்படும் போது நமது உடலும் மனதும் அதை ஏற்றுக் கொள்வதில்லை.எனது உடல்நிலை குறித்து செய்தி அளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் அளிப்பேன். உங்களுக்கு விரைவில் அப்டேட் கொடுப்பேன். அது என்ன அப்டேட் என்பது எனக்கான சிறப்பு உரிமை என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

பிரம்மாஸ்திரா:


Amitabh bachchan: கொரோனாவால் மனமுடைந்த அமிதாப் பச்சன்...ரசிகர்களுக்கு எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் படம் குறித்த ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, நாகார்ஜுனா ஆகியோர் சமீபத்தில் சென்னையில் பிரம்மாஸ்திரா  படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒரு மேடையில் தனது மனைவி ஆலியா பட் குறித்து நகைச்சுவையாக கேலி செய்த ரன்பீர்,  சென்னையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியின் போது அதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget