மேலும் அறிய

அமிதாப் பச்சன் ஒரு சர்வாதிகாரி...கமலுக்கு எதிராக திட்டம்போட்டு அதை செய்தார்...உண்மையை உடைத்த பிரபலம்

கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ட்ராப் ஆகிடும் என்கிற நெகட்டிவ் இமேஜை பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உருவாக்கியதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்

மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் பற்றி பேசியுள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது

அமிதாப் பச்சன் ஒரு சர்வாதிகாரி

இந்த வீடியோவில் அவர் " அமிதாப் பச்சன் மாதிரி ஒரு சர்வாதிகாரி. ஒரு முறை அவர் படத்திற்கு பத்திரிகை விமர்சனம் ஒன்றை வெளியிட்டது. அடுத்த நாளே தவறுதலாக அந்த விமர்சனத்தை வெளியிட்டதாக பத்திரிகை நிறுவனத்தை மன்னிப்பு கேட்கவைத்தார். 

கமலின் வளர்ச்சியை தடுத்தாரா அமிதாப் பச்சன் ?

இந்தியில் கமல் நடித்த ஏக் தூஜே கே லியே திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமல் இந்தி சினிமாவிற்கு வந்தால் தனக்கு மார்கெட் குறைந்துவிடும் என்று அமிதாப் நினைத்தார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தை இந்தியில் வெளியிட்டார்கள். அந்த படத்தை வெளியிட திரையரங்கம் கிடைக்கவிடாமல் செய்தார். 

" இந்தியில் கமல்ஹாசனை ஓரம் கட்டினார்கள். அமிதாப் பச்சன் கமலை வரவிடாமல் செய்ய என்ன முடியுமோ அதெல்லாம் செய்தார். சென்னையில் ஒரு இந்தி படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்தது. அந்த படத்தில் அமிதாப் தான் ஹீரோ. கமல் செகண்ட் ஹீரோ ஶ்ரீதேவிதான் ஹீரோயின். எதெச்சையாக நான் கமலைப் பார்க்க ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்றிருந்தேன். அப்போது அங்கு ஶ்ரீதேவியும் இருந்தார். என்ன படம் என்று நான் கமலிடம் கேட்டேன். அவர் அமிதாப் தான் ஹீரோ நான் செகண்ட் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னார். பேசிக்கொண்டிருந்த போது இந்த படம் வரும் என்று எனக்கு தோனல என்று என்னையே அறியாமல் நான் கமலிடம் சொன்னேன். அதேமாதிரி பாதி படம் எடுத்து முடித்தபோது படத்தை ட்ராப் பண்ணாங்க. கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ட்ராப் ஆகும். கமல் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்கிற நெகட்டிவ் இமேஜை அவர் மீது உருவாக்கினார்கள். உடனே அடுத்து அந்தா கானுன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரை தூக்கிவிட பார்த்தார்கள். ஆனால் ரஜினி ஒரு சில படங்களில் நடித்து வந்துவிட்டார். அன்றைய சூழலில் அமிதாப் பச்சனுக்கு சினிமா பின்னணி மற்றும் அரசியல் பின்னணி இருந்தது. கமல் அவரை எதுவும் பண்ண முடியாது. 

பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே , கிழக்கே போகும் ரயில் ஆகிய இரு படங்களை வெளியிட விடாமல் செய்தார்கள். கிராமிய படங்கள் வந்தால் அமிதாப் பச்சன் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காது என்று அப்படி செய்தார்கள்" என காந்தராஜ் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget