Shah Rukh Khan: ஷாருக் கான் படத்தில் வில்லனாகும் அபிஷேக் பச்சன்? உறுதிசெய்த தந்தை அமிதாப்பச்சனின் செயல்!
ஷாருக் கான் நடிக்க இருக்கும் கிங் படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த தகவலை அமிதாப் பச்சனின் ட்வீட் உறுதி செய்துள்ளது

ஷாருக் கான் நடிக்கும் கிங்
கடந்த ஆண்டு பதான் , ஜவான் , டங்கி என அடுத்தடுத்த மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார் ஷாருக் கான். இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களும் ரூ.1000 கோடி வசூல் ஈட்டின. ஷாருக் கான் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்கு கிங் என்று டைட்டில் வைக்கப் பட்டிருப்பதாகவும் சுஜய் கோஷ் மற்றும் சித்தார்த் ஆனந்த் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் தனது தந்தையுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக் கானின் கனவுப் படமாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.
ஷாருக் கான் படத்தில் அபிஷேக் பச்சன் வில்லன்
all the best Abhishek .. It is TIME !!! https://t.co/LI6F7gZ1b0
— Amitabh Bachchan (@SrBachchan) July 16, 2024
அன்மையில் வெளியாகியுள்ள தகவலின் படி கிங் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் வில்லனாக நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகததால் இந்த தகவல் குறித்த சந்தேகங்கள் இருந்து வந்தன. தற்போது இந்த தகவலை அபிஷேக் பச்சனின் தந்தை அமிதாப் பச்சன் உறுதிபடுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஒருவர் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறந்த நடிகர் என்று அவரை பாராட்டும் விதத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை ரீட்வீட் செய்த நடிகர் அமிதாப் பச்சன் தனது மகனுக்கு ஆல் தி பெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிங் படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிப்பது கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அபிஷேக் பச்சன் கடைசியாக பால்கி இயக்கத்தில் வெளியான கூமர் படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான இப்படம் ரசிகர்களின் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் படிக்க : Pa Ranjith : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும்...இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் பேரணி





















