Pushpa The Rule : அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட் ரெடி... புஷ்பா 2 ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் வெளியிட திட்டம்.. வாவ் அப்டேட்
அல்லு அர்ஜுன் 41வது பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி புஷ்பா : தி ரூல் படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் அல்லது டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது
புஷ்பா : தி ரூல் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்காக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். சுகுமார் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் 2022ல் தொடங்கியது. ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் என இரண்டு முக்கியமான ஷெட்யூல்களை முடித்துள்ளது புஷ்பா டீம்.
அல்லு அர்ஜுன் பிறந்தநாள் பரிசு :
புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றிக்கு பிறகு புஷ்பா : தி ரூல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது. அந்த வகையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் அல்லு அர்ஜுனின் 41வது பிறந்தாநாளான ஏப்ரல் 8ம் தேதி புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் ரிலீஸ் :
அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்தநாளை சிறப்பானதாக்க விரும்புகிறார். எனவே அவரின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி புஷ்பா 2 படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் காட்சியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பணிகளின் இறுதி வெளியீடு பொறுத்து எது வெளியாகும் என முடிவு செய்யப்படும். ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 சர்ப்ரைஸ்:
புஷ்பா முதல் பார்ட்டை காட்டிலும் இரண்டாவது பார்ட் மிகவும் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் இயக்குனர் சுகுமார் அதற்காக எதையும் விட்டு வைக்கவில்லை. பின்னணி இசை முதல் பவர்-பேக் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் வரை, புஷ்பாவின் முதல் பார்ட் எப்படி பார்வையாளர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதை விடவும் இரட்டிப்பான சர்ப்ரைஸ் புஷ்பா 2 படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்கும். முன்னர் அறிவித்த படி ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் புஷ்பா 2 திரைப்படம் மார்ச் - ஏப்ரல் 2024ல் வெளியிடப்படும்.
போஸ்ட் மூலம் அல்லு அர்ஜுன் நன்றி :
கடந்த 10 நாட்களாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்த அல்லு அர்ஜுன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷெட்யூலில் கலந்து கொண்டுள்ளார். இந்த தருணத்தில் விசாகப்பட்டினம் பீச் அருகே அவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து 'நன்றி' என்ற கேப்ஷன் வைத்துள்ளார்.