Watch Video |'சொன்ன டைம்க்கு வர மாட்டீங்களா?' கடுப்பான ரிப்போர்ட்டர்.. 'சாரி' கேட்ட அல்லு அர்ஜூன்!
Allu Arjun Reacts: காலை 11.15 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறிப்பிடப்பட்ட நிலையில் மதியம் 1 மணிக்கு மேலே படக்குழு அங்கு சென்றுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற சாமி, ''ஊ சொல்றியா மாம'' ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்கள் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தனி விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு சென்றனர். காலை 11.15 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறிப்பிடப்பட்ட நிலையில் மதியம் 1 மணிக்கு மேலே படக்குழு அங்கு சென்றுள்ளது.
இதனை பத்திரிகையாளர் ஒருவர் நேரடியாக அல்லு அர்ஜூனிடம் கேட்டார். நீங்கள் 11.15 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு என சொன்னீர்கள். தற்போது மணி 1.15. இப்படி தாமதமாக வருவது சரிதானா என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு வாயடைத்தனர். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் தகவலை கேட்டறிந்த அல்லு அர்ஜூன் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். நான் மிகவும் வருந்துகிறேன். நான் தனி விமானத்தில் வந்தேன். கடுமையான பனி காரணமாக விமானம் சரியானநேரத்தில் கிளம்பவில்லை. நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. இப்படி குழப்பம் ஏற்பட்டது என எனக்கு தெரியாது. இப்போதுதான் தெரியும். சாரி எனத் தெரிவித்தார்
தவறு எனத் தெரிந்ததும் பெருந்தன்மையாக சாரி கேட்ட அல்லு அர்ஜூனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
సారీ చెప్పడం వల్ల మనిషి పెరుగుతాడే గాని
— Mirchi RJ Sameer (@MirchiRJSameer) December 15, 2021
తగ్గడు - @alluarjun
The star who promptly apologized for the unforeseen delay that kept the press waiting 👏🏽
The journalist who asked the guests to show concern for others time 🔥#Pushpa #Respect pic.twitter.com/4YAMhQGQtQ
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்