Alia Bhatt : கிண்டல்கள் தொடங்கி கங்குபாய் வரை... அலியா பட்டின் மாஸான 10 வருடங்கள்.. ஹார்டின்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..
இம்தியாஸ் அலியின் ’ஹை வே’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு அலியா பட் முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகை அலியா பட் பாலிவுட்டில் கால் பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை நினைவுகூறும் வகையில் முன்னதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மகேஷ் பட்டின் இளைய மகளான நடிகை அலியா பட், கடந்த 2012ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குநர் கரண் ஜோகரின் படத்தில் அறிமுகமான அலியா பட், தான் அறிமுகமான காலத்தில் பல கேலிகளையும் எதிர்கொண்டார். குறிப்பாக கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டின் குடியரசுத் தலைவர் குறித்து கேள்விக்கு குழம்பி அவர் பதிலளித்த நிலையில், அலியா பட் குறித்த ட்ரோல்களும் கேலிப் பதிவுகளும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின.
View this post on Instagram
இந்நிலையில், இம்தியாஸ் அலியின் ’ஹை வே’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு அலியா பட் முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஸி, கல்லி பாய் என சிறந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வெற்றிகரமான நாயகியாக பாலிவுட்டில் வலம்வரத் தொடங்கினார்.
இதனிடையே பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்பீருடன் காதலில் விழுந்த அலியா, இந்த ஆண்டு மத்தியில் அவரைத் திருமணம் செய்தார். முன்னதாக அலியா நடித்த கங்குபாய் படம் விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
கங்குபாயாக வாழ்ந்த அலியாவின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இச்சூழலில் அலியாவின் முதல் படமான ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. தற்போது அலியா கருவுற்றிருக்கும் சூழலில் தான் திரைத்துறையில் 10 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடி வருகிறார்.
நான் ஒவ்வொரு நாளும் நன்றியுடையவராக இருக்கிறேன். நான் இன்னும் சிறிப்பாக செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன். இன்னும் ஆழமாக கனவு காண்பேன். கடினமாக உழைப்பேன்" என இதுகுறித்து முன்னதாக் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தான் பாலிவுட்டில் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் குறிப்பிட்டு அலியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் காமெண்ட் செக்ஷனில் அலியா பட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.