மேலும் அறிய

Ajiths Valimai First Look: வெளியானது ‘வலிமை’ பட போஸ்டர்.. மாஸ் லுக்கில் அஜித்..!

மாஸ் லுக்கில் அஜித் இருக்கிறார். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலையே சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம்  ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் வெளிநாட்டிலும், இங்கும் படமாக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பிறகு, ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. இரண்டாவது அலையால் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. 

மாஸா கெத்தா மிரட்டும் 'விக்ரம்' ஃபர்ஸ்ட் லுக் | KAMAL | VIJAY SETHUPATHI| LOKESH KANAGARAJ |

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அஜித் தொடர்பான சில காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படமாக்க இருப்பதால், இன்னும் சில தினங்களில் அதுவும் படமாக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், வலிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வருகின்றனர்.

Ajiths Valimai First Look: வெளியானது  ‘வலிமை’ பட போஸ்டர்.. மாஸ் லுக்கில் அஜித்..!

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்லுக் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மாஸ் லுக்கில் அஜித் இருக்கிறார். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலையே சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக,  #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டியில் வலிமை அப்டேட் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம், வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அப்டேட் கிடைக்கும் என்றார் அவர். பின்னர், வானதி வெற்றி பிறகு, அவரிடம் மீண்டும் அது தொடர்பாக கேட்டனர். இதுபோல பலரிடம், பல இடங்களில்  ‘வலிமை’ அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வந்ததால், படம் குறித்த அப்பேட் சரியான நேரத்தில் வரும் என்றும், அதுவரைக்கும் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கையின் மூலம் அஜித் கூறினார். ஆனால், எதையும் கேட்காத மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர்.

சமீபத்தில் அஜித் ரசிகர்கள், கோயில் பூசாரிகளிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதேபோல், இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் கேட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget