Ajith Weight Loss: உடல் எடையை குறைத்த அஜித்... AK61 படத்தின் புதிய அப்டேட்!
Ajith Weight Loss for AK61 Movie: இந்தப் படத்துக்காக அஜித் ஏற்கெனவே 10 கிலோவை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
AK61 திரைப்படத்துக்காக நடிகர் அஜித் குமார் தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவான 'வலிமை’ படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக, அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தின் அஜித் போஸ்டரை வெளியிட்டு தகவலை உறுதிப்படுத்தினார் போனி கபூர். இதனைத்தொடர்ந்து, ‘வலிமை’ படம் போல இந்தப் படத்தின் அப்பேட்களும் அவ்வப்போது வந்துக்கொண்டிருக்கிறது.
Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022
தற்போது, AK61 திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்காக அஜித் தனது உடல் எடையை குறைப்பதுதான் அந்த புதிய அப்டேட். இந்தப் படத்துக்காக அஜித் ஏற்கெனவே 10 கிலோவை குறைத்துள்ளதாகவும், இன்னும் 25 கிலோவை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#AjithKumar reducing weight for #AK61 already reduced 10kg
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 2, 2022
Planning to reduce 25kg pic.twitter.com/MPeysNlvqk
ஏகே 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாதத்தில் தொடங்கும் இந்த ஷூட்டிங் பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டு 7 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து இந்த ஆண்டே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏகே 61 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இதனால், இந்த வருடத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உறுதி என்பதை படக்குழு சொல்லாமல் விருந்து வைக்க காத்திருக்கிறது. ஏற்கனவே வலிமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், அடுத்து ஏ.கே 61 மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்