Agilan Box Office Collection: கடல் ராசா வசூலில் சாதித்தாரா... அகிலன் பட முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் விபரம்!
கிட்டத்தட்ட 50 கோடி செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அகிலன் படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், சிரக் ஜனி, தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படம் நேற்று (மார்ச்.10) பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ஜெயம்ரவி - கல்யாண் கிருஷ்ணன் இருவரும் பூலோகம் படத்துக்குக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், கடல் வழி வாணிபம், சுங்கத்துறையை மையமாகக் கொண்டு நடைபெறும் அரசியல், ஆக்ஷன் காட்சிகள் என இடம்பெற்று எதிர்பார்ப்புகளை எகிறச்செய்தது.
இந்நிலையில், இப்படம் நேற்று ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. துறைமுகத்தில் நடைபெறும் மாஃபியாவில் பங்கு கொள்ளும் க்ரேன் ஆபரேட்டராக ஜெயம் ரவி இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. அதிலும்,. ஜெயம் ரவியின் நடிப்பு குறிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்ந்லையில், அகிலன் படம் முதல் நாளில் 1.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 50 கோடி செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அகிலன் படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அகிலன் படம் 1.70 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. எனினும் வார இறுதி நாள்களான இன்றும் நாளையுல் வசூல் இன்னும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
முன்னதாக அகிலன் பட ப்ரொமோஷன் பணிகளின் போது இப்படத்துக்காக பட்ட கஷ்டங்கள் குறித்து ஜெயம் ரவி பேசியது கவனமீர்த்தது.
“படத்தின் மொத்த படக்குழுவும் ரொம்ப கஷ்டப்பட்டோம். கப்பல் டீம், பாதுகாப்பு டீம், படக்குழு என எல்லாரையும் ஒருங்கிணைத்தது சவாலா இருந்தது. அதிகாலை 3 மணிக்கு கடற்கரைக்கு போய் பிளான் பண்ணுவாங்க. கப்பல்ல போய் படம் எடுக்க பொதுவா அனுமதி கிடையாது. கப்பல் எப்போ வருதோ அப்போ போய் எடுத்துக்கலாம். கரையில் ஒரு சீன் எடுத்துட்டு இருப்போம்.
கேப்டன் மனசு வச்சா கப்பல் எஞ்சின் இருக்க அறையில ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கும். சிலர் ஓகே சொன்னாங்க. சிலர் மாட்டேன்னு சொல்லிட்டாங்க. கப்பல் வருதுன்னு தெரிஞ்சா அப்படியே நிறுத்திட்டு கப்பல் காட்சி எடுக்கப் போயிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: Sivakarthikeyan - Soori Combo : காமெடியன் டூ ஹீரோ... சூரிக்கு அடித்த இரண்டாவது ஜாக்பாட்... SKவின் மூன்றாவது தயாரிப்பு 'கொட்டுகாளி'