மேலும் அறிய

Siddharth Aditi Rao Hydari: ராஜஸ்தானில் ஹாலிடேஸ்... இணையத்தில் ட்ரெண்டாகும் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி ஃபோட்டோ!

அதிதி ராவ் ஹைதாரி - சித்தார்த் தம்பதி இருவரும் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.

அதிதி ராவ் ஹைதாரி - சித்தார்த் இருவரும் இணைந்திருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோலிவுட்டில் ‘மகா சமுத்திரம்’ படத்தில் நடித்தது முதல் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலில் திளைத்து வருவதாகத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
தொடர்ந்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு இவர்கள் இருவரும் வந்த நிலையில், இணையத்திலும் இருவரும் மாறி மாறி காதல் மழை பொழிந்து வந்தனர். ஆனால் இருவருமே இது குறித்து தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் அதிதி ராவ் ஹைதாரி - சித்தார்த் தம்பதி இருவரும் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.

அதிதியின் உறவுக்காரரும் நடிகை மற்றும் அரசியல்வாதியுமான பினா இவர்களது புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இவை இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bina Kak (@kakbina)

முன்னதாக தங்கள் உறவு குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சித்தார்த் "நான் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், அது தி ட்ரூமன் ஷோ திரைப்படம் போல் இல்லாமல் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு ரியாலிட்டி ஷோ கதாபாத்திரம் அல்ல, நான் என் வாழ்க்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு, 100 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்திருப்பேனோ அப்படியே வாழ விரும்புகிறேன்.

அனைவரின் கையிலும் மொபைல் போன் மற்றும் கேமரா இருப்பதால், நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமல்ல.என் வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கும்” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக அதிதி - சித்தார்த் இருவரும் மால டம் டம் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் இணையத்தில் வைரலானது. சித்தார்த் நடிப்பில் வரும் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்தப் படத்தில் திவ்யான்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அதிதி ராவ் ஹைதாரி முன்னதாக ஜூபிலி இணைய தொடரில் நடித்திருந்தார். தமிழில் ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்திருந்தார்.  விரைவில் இவர் நடிப்பில் காந்தி டாக்ஸ் எனும் பேசும் படமும், லயனஸ் எனும் ஆங்கிலப் படமும் வெளியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget