மேலும் அறிய

Vichithra: தைரியமாக எடுத்த முடிவு.. தலைகீழாக மாறிய விசித்ரா வாழ்க்கை.. கவர்ச்சி நடிகையாக மாறியது இப்படிதான்!

1992 ஆம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், விஜய், விசித்ரா என பலரும் நடித்த படம் “தலைவாசல்”.

தன்னுடைய சினிமா வாழ்க்கை எந்த படத்தின் மூலம்  மாறியது என நடிகை விசித்ரா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

1992 ஆம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், விஜய், விசித்ரா என பலரும் நடித்த படம் “தலைவாசல்”.பால பாரதி இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த விஜய் தான் பின்னாளில் ரசிகர்களால் “தலைவாசல்” விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இந்த படம் விசித்ராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், “தலைவாசல் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட் சாயலில் ஒரு பாடல் இருக்கும். நான் என் வீட்டு பெண்களை தவிர்த்து டான்ஸ் ஆடிய வெளியில் உள்ள பெண் என்றால் அது விசித்ரா தான். மேலும் அந்த படத்தில் பாலியல் தொழில் செய்யும் நபராக வருவார். ஆனால் மொத்த படத்தையும் பார்த்தாலும் எந்த கேரக்டரும் இவரை தொட்டோ, அல்லது இவர் யாரையும் தொட்டோ நடித்திருக்க மாட்டார். அந்த கேரக்டர் விசித்ராவில் சிறந்த சினிமா கேரக்டர்களில் ஒன்று” என கூறினார். 

தொடர்ந்து பேசிய விசித்ரா, “தலைவாசல் படத்தில் நான் நடிக்க எடுத்த முடிவு தான் திரையுலக வாழ்க்கையையே மாற்றியது. அந்த படம் முழுக்க நான் போர்த்திக் கொண்டு தான் நடித்தேன். ஆனால் என்னை கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது. என்னுடைய சினிமா பாதையே மாறி விட்டது. அதை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். நடக்கவே இல்லை. இருந்தாலும் எனக்கு கிடைத்த கேரக்டர்களை கொண்டு தயாரிப்பாளருக்கும், இயக்குநர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் வராமல் வேலை பார்த்து கொடுத்திருக்கேன். சவாலான ஒரு கேரக்டரை எடுத்து பண்ண வேண்டியிருந்தால் மக்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சி பண்றதா அல்லது நமக்கு பிடிச்ச மாதிரி பண்றதா என தெரியவில்லை. இதை சரியாக கையாள்வது இயக்குநர் கையில் தான் உள்ளது" என தெரிவித்தார். 

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட விசித்ரா, பின்னாளில் ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளிலும் அசத்தினார். மேலும் கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் மீதான இமேஜை உடைத்தெறிந்தார். அதன்பின்னர் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget