Vichithra : 100 சதவீதம் யோக்கியன் என்றால் இவர்தான்.. நடிகை விசித்திரா குறிப்பிட்ட அந்த நபர் யார்?
தமிழ் சினிமாவில் 100 சதவீதம் யோக்கியர் என்றால் நடிகர் இயக்குநருமான டி ராஜேந்திரனை தான் சொல்வேன் என நடிகை விசித்திரா தெரிவித்துள்ளார்
ஹேமா கமிட்டி
மலையாள திரையுலகில் பெண்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக கடந்த மாதம் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபல நடிகைகள் திரையுலகைச் சேர்ந்த பிரபல ஆண்கள் மீது பாலியல் குற்றம்சாட்டியது அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. மலையாள நடிகர்கள் சித்திக் , ஜெயசூர்யா , முகேஷ் , மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பாலியல் பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்கள். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. நடிகை ராதிகா சரத்குமார் இது குறித்த விவாதங்களை துணிச்சலுடன் முன்னெடுத்து பேசி வருகிறார்.
ஹேமா கமிட்டியைப் போல் ஒரு கமிட்டிஅமைத்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று சினிமாத் துறையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இந்த பிரச்சனை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காப்பது பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் நீண்ட நாட்களுக்குப் பின் இந்த பிரச்சனைக் குறித்து பேசினார்கள். ஆனாலும் அவர்கள் பிரச்சனையின் தீவிரத் தன்மையை நீர்த்துப் போக செய்யும்படி கடமைக்கு பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.
டி ராஜேந்திரன் பற்றி விசித்ரா
தமிழ் திரைத்துறையில் நடிகை விசித்திரா பாலியல் அவதூறுகள் குறித்து பேசிவருகிறார். நடிகர் ரஜினிகாந்த் இந்த பிரச்சனைக் குறித்து பேச மறுத்தது தொடர்பாக அவர் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தினார். " இந்த பிரச்சனை பற்றி நடிகர்களிடம் கேட்பதற்கு பதிலாக அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கேள்வி கேட்கவேண்டும். ஹேமா கமிட்டியை அவர்கள் ஆதரிக்கிறர்களா. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்திடம் இது பற்றி கேளுங்கள் . பின் அவரது மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யாவிடன் கேளுங்கள்” என்று விசித்திரா தெரிவித்திருந்தார். தற்போது நடிகர் டி ராஜேந்திரன் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவன்ந்துள்ளது. “ தமிழ் சினிமாவில் 100 சதவீதம் யோக்கியர் என்றால் நடிகர் மற்றும் இயக்குநர் டி ராஜேந்திரனை சொல்வேன். தான் இயக்கிய படங்களிலும் சரி நடித்த படங்களிலும் சரி பெண்ணை தொட்டு நடிக்க கூடாது என்கிற கொள்கையுடன் இருந்தவர் டி.ஆர்” என்று விசித்திரா கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Vaazhai Box Office : தி கோட் படம் வெளியாகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வாழை... வசூல் என்ன தெரியுமா?